முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி,பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி,பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

வெள்ளி, டிசம்பர் 23,2016, சென்னை  – பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா

தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து

தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து

வெள்ளி, டிசம்பர் 23,2016, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து, கிரிஜா வைத்தியநாதன் வாழ்த்துப் பெற்றார். தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து ராமமோகன ராவ், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எனவே, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

51 மீனவர்களையும் ,114 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

51 மீனவர்களையும் ,114 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வியாழக்கிழமை , டிசம்பர் 22, 2016, இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் மற்றும் 114 படகுகளை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி தளத்தில் இருந்து இயந்திரப்படகில் 5 மீனவர்களும் நாட்டுப்படகில் 7 மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை 21-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மலேசிய மந்திரி மலர் வளையம் வைத்து அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மலேசிய மந்திரி மலர் வளையம் வைத்து அஞ்சலி

புதன், டிசம்பர் 21,2016, சென்னை ; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மலேசிய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் சுப்பிரமணியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து நேற்றுடன் 16–வது நாள் என்பதால் அவரது  சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக பொதுமக்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

செவ்வாய், டிசம்பர் 20,2016, புதுடெல்லி ; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று  மாலை 5.10 மணிக்கு சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது 141 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை பிரதமரிடம்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலை : அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலை : அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்

செவ்வாய், டிசம்பர் 20,2016, சென்னை ; அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் நேற்று  திறந்து வைத்தனர்.பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன்,தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு