புயல் பாதிப்பு,ரூ.22,573 கோடி நிதி தேவை : பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் மனு

புயல் பாதிப்பு,ரூ.22,573 கோடி நிதி தேவை : பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் மனு

செவ்வாய், டிசம்பர் 20,2016, புதுடெல்லி ; தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேற்று தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்றும் வர்தா புயல் நிவாரணப்பணிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 573 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதா திருவுருவச்சிலை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதா திருவுருவச்சிலை

திங்கள் , டிசம்பர் 19,2016, சென்னை ; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்தில் கடந்த 6-ந்தேதி அடக்கம் செய்யப் பட்டது.அதையடுத்து  தினமும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட் டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் எப்போதும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலி

திங்கள் , டிசம்பர் 19,2016, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே கடந்த 6-இல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலாப்

பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

திங்கள் , டிசம்பர் 19,2016, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று  திங்கள்கிழமை தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.இந்தச் சந்திப்பின்போது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய நிதி ஒதுக்கக் கோருவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மனு அளிக்க உள்ளார். கடந்த 12-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியது. புயலால் ஏற்பட்ட

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திங்கள் , டிசம்பர் 19,2016, சென்னை : வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், தங்குதடையின்றி குடிநீர் மற்றும் மின்விநியோகம் வழங்கும் வகையில், அமைச்சர்கள் முன்னிலையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. சென்னையில் கடந்த 12-ம் தேதி வீசிய வர்தா புயலால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின் விநியோகமும் முடங்கியது. இதையடுத்து மீட்புப் பணிகளை தமிழக அரசு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி

ஞாயிறு, டிசம்பர் 18,2016, சென்னை ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு மொட்டை போட்டிருக்கிறார்கள்.கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் நீண்ட கியூவில் நின்று அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி