11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சனி, டிசம்பர் 17,2016, சென்னை ; 11–வது நாள் திதியையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 5–ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் 6–ந்தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது.மரணம் அடைந்து 11–வது நாள் திதி நிகழ்ச்சி போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நடந்தது.அதேநேரத்தில் மெரினா

ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு

ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 16,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில், ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் 13–ந் தேதியன்று அமோனியம் குளோரைட் உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில், தொழிற்சாலையில் பணியிலிருந்த மின் பணியாளர் கண்ணன் மற்றும் அருகிலுள்ள கடைகளில் நின்றுகொண்டிருந்த ஆறு நபர்கள் மூச்சு திணறி மயக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி

வெள்ளி, டிசம்பர் 16,2016, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று மவுன அஞ்சலி செலுத்தினர். இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரு அணி வீரர்களும் வரிசையில் நின்றபடி மவுன அஞ்சலி செலுத்தினர். இதை தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவாகவும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்று மின் வினியோகம் சீராகும் ; அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் இன்று மின் வினியோகம் சீராகும் ; அமைச்சர் தங்கமணி தகவல்

வியாழக்கிழமை, டிசம்பர் 15, 2016, சென்னையில் மின் வினியோகம் இன்று 100 சதவீதம் சீராகும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். வர்தா புயலின் காரணமாக சூறைக்காற்றுடன், கன மழை பெய்ததால், சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இதன் காரணமாக மின்சார வாரியத்தின் கம்பிகளும், தொலைபேசி கம்பிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டன.வர்தா புயலால் இதுவரை சுமார் 19 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 450 மின்மாற்றிகள்,

புயல்,நிவாரண பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புயல்,நிவாரண பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வியாழன் , டிசம்பர் 15,2016, வர்தா புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களைச் சீர் செய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட வர்தா புயலில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களிலும் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலால்

புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆறுதல்

புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  ஆறுதல்

வியாழன் , டிசம்பர் 15,2016, சென்னை ;  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நேற்று பார்வையிட்டு புயலால் பாதிக்கப்பட்ட 43 பேருக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கினார். முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘வார்தா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக அரசு விரைந்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக