விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.1000 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.1000 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 10 , 2017 ,வியாழக்கிழமை, விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை நன்னீராக்கும் புதிய திட்டம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊரகக்

கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் : எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆகஸ்ட் 10 , 2017 ,வியாழக்கிழமை, விழுப்புரம் : குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கைப்பரப்பு செயலாளருமான தம்பிதுரை சிறப்புரையாற்றினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலந்து கொண்டு

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

சென்னையில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் கைது

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை :  திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகில் கள்ளத்துப்பாக்கியுடன் தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை ஒழிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.சென்னை போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரும் கள்ளத்துப்பாக்கி கும்பலை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த குமார் என்பவர் கள்ளத்துப்பாக்கிகளை வாங்கி விற்பனை செய்யும்

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் உதவி

அ.தி.மு.க. தொண்டர் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் உதவி

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை : திருச்சி விமான நிலையத்தில் கத்தியுடன் வந்ததால் கைதான அ.தி.மு.க. தொண்டர் சோலைராஜன் மகள் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருள்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கி உதவி செய்து உள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது  அவரை வழியனுப்ப வந்த தொண்டர்கள்  கூட்டத்தில் சோலைராஜன் என்பவர் கத்தியுடன் பிடிபட்டார். பாதுகாப்பு படைவீரர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாக அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சிபெரும் வகையில் 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயிற்சிபெரும் வகையில் 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, சென்னை : நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சிபெற 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை வட்டார பண்பாடு, தொன்மை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று  நடைபெற்றது.கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- அரசுத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது. மூன்று மாதத்துக்குள் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்படும். தமிழக கல்வித்துறை அடுத்த

80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் கைது

ஆகஸ்ட் 09 , 2017 ,புதன்கிழமை, தஞ்சை : தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி யின் மகன், அன்பழகன், 80 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் முன்னாள் தி.மு.க அமைச்சர் கோ.சி. மணி இவர் திமுக அமைச்சரவையில் முக்கிய இலாக்காவை வைத்து இருந்தவர். இவருக்கு மதியழகன், இளங்கோவன், அன்பழகன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். மதியழகன் இறந்து விட்டார். அன்பழகன் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.