புயலால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புயலால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புதன், டிசம்பர் 14,2016, ‘வார்தா’ புயலால் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் பேரிடர் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ”’வார்தா’ புயல் காரணமாக 1,388 குடிசைகள் முழுமையாகவும் 5,739 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 16 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான்உத்தரவிட்டுள்ளேன்.

புயல் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

செவ்வாய், டிசம்பர் 13,2016, ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். முதல்கட்டமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலைப் பகுதியைப் பார்வையிட்டார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டதைப் பார்வையிட்டதோடு, பணிகளை துரிதப்படுத்தினார். அடுத்த கட்டமாக, மணலியில் உள்ள நிவாரண முகாம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து

மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  உறுதி

செவ்வாய், டிசம்பர் 13,2016, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் “மிலாதுன் நபி” வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, இஸ்லாமியர்களுக்காக செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அம்மா அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; புரட்சித் தலைவி அம்மா இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணற்றவை ஆகும். உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, புனித

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

திங்கள் , டிசம்பர் 12,2016, சென்னை, பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த ஜெயலலிதா மற்றும் சோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

திங்கள் , டிசம்பர் 12,2016, சென்னை ; மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து குடும்பம், குடும்பமாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகை த்ரிஷா தனது தாயாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப் பட்டது. அன்று முதலே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான