மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, சென்னை : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று பகல் 11-30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்ஜமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மறைந்த

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 203 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 203 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சனி, டிசம்பர் 10,2016, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்தும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து மரணமடைந்த 203 பேரின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 6 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை, 11 டிசம்பர் 2016      தமிழகம் அ+

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம்,குடும்பமாக அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம்,குடும்பமாக அஞ்சலி

சனி, டிசம்பர் 10,2016, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்,சென்னை மெரீனா கடற்கரைக்கு குடும்பம், குடும்பமாக வந்து,  கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அவரது நினைவிடத்தில் தினமும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.அதிமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடுத்து, மறைந்த தங்களது

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அமைச்சரவை முதல் கூட்டம்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அமைச்சரவை முதல் கூட்டம்

சனி, டிசம்பர் 10,2016, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையின் முதல் கூட்டம் இதுவாகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் காலை 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்படும். மேலும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்படும். கூட்டத்தில், சில முக்கிய தொழில்

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவிகள் அஞ்சலி

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவிகள் அஞ்சலி

சனி, டிசம்பர் 10,2016, சென்னை ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் பிரார்த்தனை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் காலையில் பிரார்த்தனை நேரத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அஞ்சலி