மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அன்னதானம் ; மறைந்தாலும் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அன்னதானம் ; மறைந்தாலும் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கம்

வெள்ளி, டிசம்பர் 09,2016, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இறந்தாலும் ஏழைகளின் பசியை போக்குகிறார் என்று பொதுமக்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். வறுமையில் வாடினாலும் போக்குவரத்து செலவுக்கு அக்கம் பக்கத்தில் கடனை வாங்கிக்கொண்டும் சிலர் வருகிறார்கள். இந்தநிலையில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் அனைத்து மக்களுக்கும் காலை, மதியம், இரவு என்று 3 வேளையும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள் வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தொடந்து மக்கள்  வெள்ளம் ; நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி

வெள்ளி, டிசம்பர் 09,2016, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக 3–வது நாளாக நேற்றும் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், 6–ந்தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய

அந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

அந்தோணியார் திருவிழாவில் அனைத்து தமிழக மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

வெள்ளி, டிசம்பர் 09,2016, கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; புதிதாகக் கட்டப்பட்டுள்ள அந்தோணியார் தேவாலய திருவிழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாயத்தினர் பங்கேற்க அரசியல் ரீதியான அனுமதியை வழங்க வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தாங்கள் அறிவுறுத்தக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கச்சத்தீவில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ’தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்’ ; மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ’தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்’ ;  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புகழாரம்

வியாழன் , டிசம்பர் 08,2016, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மவுனம் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா, தமிழகத்தில் தன்னிகரற்ற தலைவராகவும், பெண்ணுரிமையைப் போற்றுபவராகவும் திகழ்ந்ததாகவும் அந்த கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு,சென்னையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவளித்து அஞ்சலி

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு,சென்னையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவளித்து அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016, சென்னை ; மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளுக்காக சென்னையில் உணவகங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி சரியான வழியில் தங்கள் அஞ்சலியைச் செலுத்தின. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழகமே திரண்டு நின்று துயரப்பட்டாலும், அம்மா உணவகங்கள் திறந்திருந்தன. அங்கே உணவுகள் விற்கப்படவில்லை. இலவசமாக வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் சுமார் 350 உணவகங்கள் நேற்று  முன்தினம்  திறக்கப்பட்டு, தொடர்ந்து உணவுகள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016, மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு நாளிதழ்கள் தலையங்கம் எழுதி புகழஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழகத்தின் பெரும் தலைவர் மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து இலங்கையின் அரசு நாளிதழான ‘டெய்லி நியூஸ்’ தலையங்கம் தீட்டியுள்ளது. “தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது” என்று ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விதந்தோதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. கொழும்புவின் மைய நீரோட்ட ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகள் ஜெயலலிதாவின் “இலங்கைக்கு எதிரான” போக்கிற்காக அவரை தொடர்ந்து விமர்சித்து வரும்