மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற நண்பர் ‘சோ’ மறைவுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற நண்பர் ‘சோ’ மறைவுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016, சென்னை : அரசியல் விமர்சகரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற நண்பருமான சோ ராமசாமியின் மறைவுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர் சோவின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதே போல் சசிகலாவும் சோ உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சோ ராமசாமி மறைவுக்கு, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; துக்ளக் பத்திரிக்கை நிறுவன ஆசிரியரும், புகழ்பெற்ற அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி

சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக காவல்துறையினருக்கும்,தமிழக மக்களுக்கும் கவர்னர் பாராட்டு

சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக காவல்துறையினருக்கும்,தமிழக மக்களுக்கும் கவர்னர் பாராட்டு

வியாழன் , டிசம்பர் 08,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் போது அமைதி காத்த தமிழக மக்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் உணர்ச்சி பெருக்குடன் கூடிய சூழ்நிலையில், ராஜாஜி அரங்கில் அரசு எந்திரம் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தது. அங்கே பொதுமக்கள் அஞ்சலிக்காக மாண்புமிகு அம்மா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பகைவரின் பாராட்டையும் பெற்றவர் ; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்

வியாழன் , டிசம்பர் 08,2016, சென்னை ; நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல, பகைவர்களின் பாராட்டையும் பெற்றவர் ஜெயலலிதா என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி எம்.வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவரது பகைவர்களுக்கு மட்டுமல்ல அவரின் நண்பர்களுக்கும் அவரிடம் பயம் உண்டு. அதோடு அவரது நண்பர்களின் பாராட்டை மட்டுமல்ல

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய மக்கள் வெள்ளம் ; மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் விடிய விடிய மக்கள் வெள்ளம் ; மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 08,2016, சென்னை : மெரீனா கடற்கரையில் அலைகடலென திரண்ட மக்கள்,மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 5-ம் தேதி மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு 11.30

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

வியாழன் , டிசம்பர் 08,2016, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்தும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து மரணமடைந்த 77 பேரின் குடும்பத்தினருக்கு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நில நிதியுதவியாக வழங்கப்படும் எனவும் அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்; உலக மக்கள்