மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக நாடுகள் இரங்கல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உலக நாடுகள் இரங்கல்

புதன், டிசம்பர் 07,2016, சென்னை ; சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே நேற்று, 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.இந் நிலையில் மறைந்த முதலமைச்சர்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

புதன், டிசம்பர் 07,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து வெளியிட்ட இரங்கல் செய்தியில்; திரைப்பட உலகில் கதாநாயகியாக 120-க்கும் அதிகமான தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ் எய்தியவர் ஜெயலலிதா. அதன் பின்னர் எனது அருமை நண்பர் புரட்சி நடிகர் எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

புதன், டிசம்பர் 07,2016, சென்னை  ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார். உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் ; மக்களின் தலைவரை நாடு இழந்துவிட்டதாக இரு அவைகளிலும் புகழாரம்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் ; மக்களின்   தலைவரை நாடு இழந்துவிட்டதாக இரு அவைகளிலும் புகழாரம்

புதன், டிசம்பர் 07,2016, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளிலும், நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, உறுப்பினர்களின் அஞ்சலிக்கு பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியதும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பேரிழப்பாகும் என்றும், அவர் தலைசிறந்த நிர்வாகி என்றும்,மக்களின்   தலைவரை நாடு இழந்துவிட்டதாகவும் மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டினார்.

லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

புதன், டிசம்பர் 07,2016, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நேற்று, 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.அவரது உடலுக்கு சசிகலா, மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இருவரும் இறுதிச் சடங்குகளை செய்தனர். ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.ஜெயலலிதாவின் உடல், ‘புரட்சித்