ராஜாஜி அரங்கில் மக்கள் வெள்ளம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

ராஜாஜி அரங்கில் மக்கள் வெள்ளம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி

செவ்வாய், டிசம்பர் 06,2016, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு செய்தியை கேள்விபட்டு, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அஞ்சலி செலுத்தப்படும் ராஜாஜி அரங்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம்…

முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு சகாப்தம்…

செவ்வாய், டிசம்பர் 06,2016,  மக்களுக்காக நான்…மக்களால் நான் என்று அறிவித்து அதன்படியே பொதுவாழ்வில் வாழ்ந்து காட்டியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா, ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த

தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை : முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற

முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

முதல்வர் ஜெயலலிதா மறைவு ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

செவ்வாய், டிசம்பர் 06,2016, தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்கள்விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி இன்று தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் இன்று மாலை நல்லடக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம்  அருகில் இன்று மாலை நல்லடக்கம்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை ; முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை

முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

முதல்வர ஜெயலலிதா மறைவு : ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்

செவ்வாய், டிசம்பர் 06,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி அறிந்ததும்,குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் : தமிழகத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றியவர் லட்சக்கணக்கான மக்கள் விரும்பிய ஒரு தலைவரை நாடு இழந்து விட்டது. பிரதமர் மோடி: ஜெயலலிதா மறைவு அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா: ஏழை,