தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

செவ்வாய், டிசம்பர் 06,2016, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முதல்வரின் மரணச் செய்தியால் தமிழக மக்களும், அவரது கட்சித் தொண்டர்களும் கண்ணீர் கடலில் மூழ்கினர். அ.தி.மு.க.

முதலமைச்சர் ஜெயலலிதா,நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும்,பொதுமக்களும் மனமுருக பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா,நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான  அ.தி.மு.க. தொண்டர்களும்,பொதுமக்களும் மனமுருக பிரார்த்தனை

திங்கள் , டிசம்பர் 05,2016, சென்னை: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கண்ணீருடன் கூடிய பிரார்த்தனையுடன் மருத்துவமனை வாசலிலேயே அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததுமே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை : எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வருகை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை : எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வருகை

திங்கள் , டிசம்பர் 05,2016, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து 4 டாக்டர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா  எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது. அறுவை சிகிச்சைக்குப்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை ; ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை

திங்கள் , டிசம்பர் 05,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் சிகிச்சை அளித்தனர். முதல்வரின் உடல் நிலை குறித்த செய்தி கேள்வி பட்டதும் பொது மக்களும் தொண்டர்களும் அப்பல்லோ முன்பு கவலையுடன் திரண்டனர் . முதல்வர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதற்காக

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘திடீர் ‘ உடல்நலக் குறைவு ; தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஞாயிறு, டிசம்பர் 04,2016, சென்னை ; கடந்த இரண்டு மாதமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வந்த நிலையில் , இன்று  மாலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் இதயத்தை சீராக்கும் கருவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, சென்னை அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.