கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் எதிரொலி ; தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளி, நவம்பர் 25,2016, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, இந்நோய் தமிழகத்தில் பரவுவதை தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பண்ணை பசுமை காய்கறி கடை திட்டம் ; தூத்துக்குடியில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பண்ணை பசுமை காய்கறி கடை திட்டம் ; தூத்துக்குடியில் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை

வெள்ளி, நவம்பர் 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீர்மிகு திட்டமான பண்ணை பசுமை காய்கறி கடை, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இக்கடை தொடங்கப்பட்டு, 810 நாட்களில், 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏழை-எளியோருக்கு மலிவான விலையில் தரமான பசுமையான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய

“போர்க்குணம் மிக்கவர் முதலமைச்சர் ஜெயலலிதா” ; பிரதமர் மோடி புகழாரம்

“போர்க்குணம் மிக்கவர் முதலமைச்சர் ஜெயலலிதா” ; பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளி, நவம்பர் 25,2016, புதுதில்லி: மாநிலங்களவை கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக எம்பிக்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்து அறிந்தார்.அப்போது அவர் முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் அப்பல்லோ சென்று விசாரித்து வந்தனர். அதேபோல் மத்தியில் ஆளும் பாரதீய

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடு

வியாழன் , நவம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஒன்றியக் கழகம் சார்பில், பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 108 தேங்காய் உடைத்து, பெருந்திரளானோர் பிரார்த்தனை நடத்தினர். திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருத்துறைப்பூண்டியை அடுத்த வேளூரில்

முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ; அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

வியாழன் , நவம்பர் 24,2016, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளும் கிடைத்திட, முதல்வர் அறிவித்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு விட்டுள்ளார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.