தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி “அதிமுக எம்.பிக்கள் மத்திய அரசிடம் மனு”

தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி “அதிமுக எம்.பிக்கள் மத்திய அரசிடம் மனு”

வியாழன் , நவம்பர் 24,2016, தமிழக கூட்டுறவு அமைப்புகளுக்‍கு 3 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்‍ கடன் உடனடியாக வழங்க வேண்டும், தொடக்‍க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடனை திரும்பி செலுத்த அனுமதிக்‍க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லியிடம் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் டெல்லியில் நேற்று  வழங்கினர்.  மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லியிடம் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் கோரிக்‍கை மனு ஒன்றை அளித்தனர். வேளாண்

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவும்,பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்யவும் முன்னோடித் திட்டம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவும்,பயிர்க்கடன் பெற்று சாகுபடி செய்யவும் முன்னோடித் திட்டம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், நவம்பர் 23,2016, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பயிர்க்கடன் பெற்று, விவசாயிகள், சாகுபடி மேற்கொள்ளும் வகையிலும் ஒரு முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலமாக பயிர்க் கடன் வழங்கப்படும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக

3 தொகுதி தபால் ஓட்டு ; ராணுவ வீரர்களும் அ.தி.மு.க.,பக்கம்

3 தொகுதி தபால் ஓட்டு ; ராணுவ வீரர்களும் அ.தி.மு.க.,பக்கம்

புதன், நவம்பர் 23,2016, நடந்து முடிந்த தஞ்சாவூர், அரவக்குறி்ச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும், ஆளும் கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.இதில் பதிவான தபால் ஓட்டில் பெரும்பாலான ஓட்டுகளை அ.தி.மு.க பெற்றது. மூன்று தொகுதிகளிலும், ராணுவம், துணை ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை போன்றவற்றில் பணிபுரிவோர், தபால் ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தொகுதியில் பதிவான, 30 ஓட்டு களில், அ.தி.மு.க.,வுக்கு, 29 ஓட்டுகளும், தி.மு.க.,வுக்கு ஒன்றும் கிடைத்தது. திருப்பரங் குன்றம் தொகுதியில், 48 ஓட்டுகள் பதிவாகின; இரண்டு ஓட்டுகள்

3 தொகுதிகளிலும்,அ.தி.மு.க.வெற்றி ; தமிழகம் முழுவதும் தொண்டர்களும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டம்

3 தொகுதிகளிலும்,அ.தி.மு.க.வெற்றி ; தமிழகம் முழுவதும் தொண்டர்களும், பொதுமக்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக கொண்டாட்டம்

புதன், நவம்பர் 23,2016, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கழக வேட்பாளர்களின் வெற்றியினை, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் தங்கள் முழு ஆதரவை அளித்துள்ளதாக, கழகத் தொண்டர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். தமிழகத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் கடந்த 19–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்

மக்கள் என் பக்கம் உள்ளனர் : வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

மக்கள் என் பக்கம் உள்ளனர் : வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

புதன், நவம்பர் 23,2016, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, 3 தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடல்நலம் தேறி வரும் தனக்கு 3 தொகுதி வெற்றி, எல்லையில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். மக்கள் தன் பக்கம் உள்ளனர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதத்துடன்    தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தனது பணிகள் எப்போதும் சிறப்புடன் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று தொகுதி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் 3 தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி ; அ.தி.மு.க.வின் பலம் 136 ஆக உயர்வு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்  3 தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி ; அ.தி.மு.க.வின் பலம் 136 ஆக உயர்வு

புதன், நவம்பர் 23,2016, தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடத்தப்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான முடிவுகள்  நேற்று வெளியாகின. அதன்படி, தமிழகத்தில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும்  அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, சட்டப் பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 136 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில்  நேற்று காலை 8 மணிக்கு வாக்கு