இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய், நவம்பர் 22,2016, கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:- பிரபல கர்நாடக இசை விற்பன்னரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இன்று (22.11.2016) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். தனது ஆறாவது வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், கஞ்சிரா, மிருதங்கம்,

அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

அப்பல்லோ மருத்துவமனையில் தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்த முதல்வர் ஜெயலலிதா உற்சாகம்

செவ்வாய், நவம்பர் 22,2016, சென்னை, தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உற்சாகமாக காணப்பட்டார். முன்னதாக, தொலைக்காட்சி மூலம் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தையும் அவர் பார்த்தார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனி அறையில் இருந்தபடி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்கள்

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை ; பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கை ; பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கள் , நவம்பர் 21,2016, வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில்கொண்டு, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மழைக்கால தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சுகாதாரத்துறை, அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேங்கிய குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகளில் கொசு மருந்து தெளித்தல், சாக்கடை நீரை வெளியேற்றுதல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரியலூர் மாவட்டத்திலும் பல இடங்களில் சுகாதாரத்துறையினர் பல்வேறு

4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை ; முடிவுகள் மாலை 3 மணிக்குள் தெரிந்துவிடும்

4 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை ; முடிவுகள் மாலை 3 மணிக்குள் தெரிந்துவிடும்

செவ்வாய், நவம்பர் 22,2016, சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து அத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று மாலை 3 மணிக்குள் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் , நவம்பர் 21,2016, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி பார்வையற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் குழு, லண்டன்–சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் அளித்த சிகிச்சையின் பயனாக முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். தினமும் 20 மணி நேரத்துக்கும் அதிகமாக செயற்கை சுவாசம் இல்லாமல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

திங்கட்கிழமை, நவம்பர் 21, 2016, சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இட்லி சாப்பிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை யால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி