தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

சனி, நவம்பர் 19,2016, தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணி முதல் முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

சனி, நவம்பர் 19,2016, சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் : அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி

வெள்ளி, நவம்பர் 18,2016, சென்னை : முதல்வர்  ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார். அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.  முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் மற்றும் நோய் தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர், நாளமிள்ளா சுரப்பி மருத்துவ நிபுணர் ஆகிய  நிபுணத்துவம் வாய்ந்த

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளி, நவம்பர் 18,2016, சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று மாலை 5 மணிமுதல், வாக்குப்பதிவு நடைபெறும் நாளை (19ம் தேதி) மாலை வரை கருத்துக்கணிப்புகள் வெளியிடத்தடை விதித்து

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன் தகவல்

வெள்ளி, நவம்பர் 18,2016,  சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஆர்.தமிழ்செல்வன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க வியாழக்கிழமை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தேன்.