அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல்

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் இரங்கல்

திங்கள் , நவம்பர் 14,2016, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மனைவியுமான விசாலாட்சி நெடுஞ்செழியன் இறப்புக்கு, முதல்வர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளதாக விசாலாட்சி அவர்களின் மகன் மதிவாணன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இந்நிலையில் அவர்

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

திங்கள் , நவம்பர் 14,2016, மக்களின் பிரார்த்தனை, வழிபாடுகளால் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், விரைவில் நடக்கவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் அன்பிற்குரிய கழக உடன்பிறப்பு களே, என் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள். உங்கள் அன்புச் சகோதரியாகிய என் மீது மிகுந்த

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் முழுவதும் குணமடைந்துவிட்டன : டாக்டர் பிரதாப் சி.ரெட்டி

ஞாயிறு, நவம்பர் 13,2016, முதல்வர் ஜெயலலிதா, தொற்றுநோய் தாக்குதலில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்’ என்றும், ‘வழக்கமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார்’, என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் புத்துணர்ச்சி பெற வேண்டியுள்ளதால் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருக்கிறார். தற்போது சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது :அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது :அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஞாயிறு, நவம்பர் 13,2016, முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழகத்தில் பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பெண்கள் பற்றிய பாரதியின் கனவை நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா, என திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தென் மாவட்டங்களை சேர்ந்த அக் கட்சியினர் திருப்பரங்குன்றம் தொகுதியில் குவிந்துள்ளனர். அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண் டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும்

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி ; சரத்குமார் பேச்சு

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி ; சரத்குமார் பேச்சு

சனி, நவம்பர் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் கூறினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி உள்பட 10–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவு

முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

முதல்வர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுவதால் செயற்கை சுவாசம் அகற்றம்

சனி, நவம்பர் 12,2016, சென்னை ; இயல்பாக மூச்சு விடுவதால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று வெகு நேரம் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டிருந்தது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா,சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குள்ள டாக்டர்களுடன் இணைந்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் : நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் :  நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

வெள்ளி, நவம்பர் 11,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாகவே சுவாசிக்கிறார் என்றும்,அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.