தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய குடியரசு சார்பில் கருத்தரங்கு ; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய குடியரசு சார்பில் கருத்தரங்கு  ; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

வெள்ளி, நவம்பர் 11,2016, தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய அரசு கல்வி அகாதெமி இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தின. இதில்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், கருத்தரங்கு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தை அறிவுத் தலைநகரமாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்தின் அடிப்படையில். தமிழக பள்ளி கல்வித் துறை, தென்கொரியாவைச் சேர்ந்த அரசு கல்வி அகாதெமியுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதன்படி,

காவிரி பிரச்னையில் துரோகம் செய்தது திமுகதான் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றச் சாட்டு

காவிரி பிரச்னையில் துரோகம் செய்தது திமுகதான் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்  குற்றச் சாட்டு

வியாழன் , நவம்பர் 10,2016, காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் செய்தது திமுகதான் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் குற்றம் சாட்டினார். தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டியில்; காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மைசூரு – சென்னை மாகாணங்கள் இடையே கடந்த 1800-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதை வலியுறுத்தி 1924-ல் மீண்டும் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை 1974-ல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கத் தவறிவிட்டார். இந்த வரலாற்றுப் பிழையால்

முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே மூச்சு விடுகிறார்

முதல்வர் ஜெயலலிதா செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே மூச்சு விடுகிறார்

வியாழன் , நவம்பர் 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதா செயற்கை சுவாசம் இல்லாமல் நீண்ட நேரம் தானாகவே மூச்சு விடுவதால், எந்த நேரத்திலும் சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம் என அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர்

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன் ; இல.கணேசன்

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன் ; இல.கணேசன்

புதன்கிழமை , நவம்பர் 09, 2016, சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்தத் தலைவருமான இல.கணேசன் இன்று  அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் ராஜ்ய சபா எம்.பி.யான பிறகு தமிழ்நாட்டில் முக்கிய

3 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம்

3 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர்  சரத்குமார் பிரச்சாரம்

புதன்கிழமை , நவம்பர் 09, 2016, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் 11.11.2016 முதல் 17.11.2016 வரை தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். 11, 17 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியும், 13,16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் தொகுதியும், 14,15 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியும் மேற்கண்ட தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிர பிரச்சாரம்

தமிழ் மொழிக்காக அயராது பணியாற்றிய வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மலர்தூவி மரியாதை

தமிழ் மொழிக்காக அயராது பணியாற்றிய வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மலர்தூவி மரியாதை

செவ்வாய், நவம்பர் 08,2016, இத்தாலியில் இருந்து வந்து தமிழ் மொழிக்காக அயராது பணியாற்றிய வீரமா முனிவரின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு அரசு சார்பில், மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்தும், தமிழுக்காக அரும்பெரும் தொண்டாற்றியவருமான வீரமா முனிவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் திரு.D.ஜெயக்குமார், திரு.கடம்பூர் ராஜு, திரு.க.பாண்டியராஜன், திரு.பெஞ்சமின்

முதல்வர் ஜெயலலிதாவை,வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தனி அறைக்கு மாற்ற ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வர் ஜெயலலிதாவை,வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தனி அறைக்கு மாற்ற ஏற்பாடுகள் தீவிரம்

செவ்வாய், நவம்பர் 08,2016, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப் டம்பர் மாதம் 22-ந் தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட் டார்.கடந்த 47 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா வுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது லண்டன் டாக்டர் திரும்பி சென்று விட் டார். எய்ம்ஸ் டாக்டர்களும் சென்று விட்டனர். அப்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, முக்கிய பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, முக்கிய பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் அரசு பேருந்து சேவை தொடக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

செவ்வாய், நவம்பர் 08,2016, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ, கார் மூலம் அதிக கட்டணம் கொடுத்து பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்று வருவதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரயில் நிலையத்திலிருந்து, பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் பேருந்து சேவையை தொடங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தூத்துக்குடி ரயில்