முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் ; நடிகை சாரதா

முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் ; நடிகை சாரதா

வியாழன் , நவம்பர் 03,2016, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக நடிகை சாரதா கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகை சாரதா இன்று மருத்துவமனைக்கு வந்தார். முதல்வரின் உடல்நலம் குறித்து அவர் கூறியது ; மருத்துவமனைக்கு வரும் போது முதல்வரின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தத்துடன்

4 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துக்கூறி,அ.தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம்

4 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை, மக்களிடம் எடுத்துக்கூறி,அ.தி.மு.க.வினர் தீவிரப் பிரச்சாரம்

வியாழன் , நவம்பர் 03,2016, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணற்ற சாதனைத் திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் திரு.

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் ; பண்ருட்டி ராமச்சந்திரன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் ; பண்ருட்டி ராமச்சந்திரன்

வியாழன் , நவம்பர் 03,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து சிறந்த முறையிலே ஏழை–எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுவார் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.மருத்துவமனைக்கு வெளியே அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் நல்ல முன்னேற்றத்தை அடைந்து

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்ட,கேரள அரசுக்கு தடை ; முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்ட,கேரள அரசுக்கு தடை ; முதல்வர் ஜெயலலிதா முயற்சிக்கு கிடைத்த வெற்றி

வியாழன் , நவம்பர் 03,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு, தனது 96-வது கூட்டத்தில் ஏற்றுக்கொண்டு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான

அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் திருத்தியமைப்பு ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் திருத்தியமைப்பு ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , நவம்பர் 03,2016, சென்னை : புதுச்சேரி மாநிலம் – நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை திருத்தயமைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 19-ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு திருத்தி

உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா சமர்பிக்கிறேன் ; கபடி வீரர் சேரலாதன்

உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா சமர்பிக்கிறேன் ; கபடி வீரர் சேரலாதன்

புதன், நவம்பர் 02,2016, சென்னை : உலக கோப்பை கபடி போட்டியில் நான் பெற்ற பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமர்பிக்கிறேன் என்று உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன் கூறியுள்ளார். உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சேரலாதன் நேற்று சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள

போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

புதன், நவம்பர் 02,2016, போலி டாக்டர்கள் குறித்து புகார் கொடுத்தால் அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை அரசு மருத்துவமனைகளில் ரூ. 211.63 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவ துறையின் கட்டடத்தை பார்வையிட்டு அவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதில் இதய நோய்,