மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன்

மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன்

புதன், நவம்பர் 02,2016, மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் என அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர்

4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடவேண்டும் ; தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம்

4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடவேண்டும் ; தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம்

புதன், நவம்பர் 02,2016, சென்னை ; தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை பெரியமேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத்தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமை தாங்கினார். பொருளாளர் த.முகமது அலி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் எம்.தமீம் மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். சிறுபான்மை மக்களுக்கு நோன்பு திறக்க அரிசி, வக்பு வாரியத்திற்கு நிதி உதவி, உலாமக்களுக்கு ஓய்வூதியம், பள்ளிவாசல் மற்றும் தர்காக்கள் பராமரிப்புக்கு நிதி உதவி என தமிழக மக்களுக்கு முதலமைச்சர்

முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா

முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் ; நமீதா

செவ்வாய், நவம்பர் 01,2016, சென்னை : பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் முதல்வர் ஜெயலலிதா என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று நடிகை நமிதா வந்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த நமீதா. கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதா பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார்.

முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்ற படுவார் என தகவல்

முதல்வர் ஜெயலலிதா அடுத்த வாரம் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்ற படுவார் என தகவல்

செவ்வாய், நவம்பர் 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா எழுந்து உட்காருகிறார்; நன்றாக பேசுகிறார்.இதனால் அடுத்த வாரம் முதலமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் என்ற 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் இடையே மோதல்

திருப்பரங்குன்றத்தில் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் இடையே மோதல்

செவ்வாய், நவம்பர் 01,2016, மதுரை திருப்பரங்குன்றம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அழகிரி தி.மு.க.விலிருந்து ஒதுக்கப்பட்டதிலிருந்து ஸ்டாலின் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், அழகிரி ஆதரவாளர்கள், ஸ்டாலின் மீது கோபத்துடன் இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் தனுத்தாக்கல் செய்ய வந்தபோது, ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களிடையே மோதல்

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 479 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 479 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

செவ்வாய், நவம்பர் 01,2016, ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில், 479 பயனாளிகளுக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 109-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 54வது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 479 பயனாளிகளுக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில்