முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ; பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ; பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

சனி, அக்டோபர் 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்து வந்த 35 குடும்பங்கள் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரும்படி, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், குடிசை மாற்றுவாரியம் சார்பில், நாவலூர் விரிவாக்க திட்டத்தின் கீழ், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருநாவுக்கரசர் நன்றி

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருநாவுக்கரசர் நன்றி

சனி, அக்டோபர் 29,2016, தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.கிண்டியில் உள்ள சிப்காட் தலைமை அலுவலகத்தை மத்திய அரசு    மாற்ற முயற்சிக்கிறது,  இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

சனி, அக்டோபர் 29,2016, சென்னை – தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வரும் 19-ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து அன்றாட பணிகளை செய்வார் ; ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து அன்றாட பணிகளை செய்வார் ; ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங்

சனி, அக்டோபர் 29,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,நேற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பலர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங், நியூஸ்–7 நிர்வாக இயக்குனர் வி.வி.எம்.சுப்பிரமணியன், நடிகர் ஓ.ஏ.கே.சுந்தர், பரதநாட்டிய

முதல்வர் ஜெயலலிதா பூரண நலன் வேண்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா பூரண நலன் வேண்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  சிறப்பு வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 28,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலன் பெற்று மீண்டு தனது மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியைத் தொடர வேண்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இன்று காலை  தனது மனைவியுடன் ஸ்ரீஆண்டாள் கோவில் வந்த அமைச்சர் பாண்டியராஜனை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர்

500, 1000 ரூபாய் தாள்களை ஆய்வு செய்து வாங்க வேண்டும் : பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை

500, 1000 ரூபாய் தாள்களை ஆய்வு செய்து வாங்க வேண்டும் : பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2016, மும்பை ; கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் புழங்குவதால் கவலை அடைந்துள்ள ரிசர்வ் வங்கி. பொதுமக்கள் 500, 1000  ரூபாய் தாள்களை நன்கு ஆய்வு செய்து கள்ள ரூபாய் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ளும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்திய  ரூபாய் தாள்களை போலியாக புழக்கத்தில் விட முயற்சிக்கிறது. அதேபோல்,இந்தியாவிலும் சில சமூக விரோத கும்பல்கள் இத்தகைய செயல்களில்