முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1 முதல் அமல் : விலையில்லா அரிசி தொடரும்

முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1 முதல் அமல் : விலையில்லா அரிசி தொடரும்

வெள்ளி, அக்டோபர் 28,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்படி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் நவ. 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், தற்போது தமிழக அரசால் பாகுபாடின்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்புச்

ஆம்னி பேருந்துகள் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் – கூடுதல் கட்டணம் பெற்றிருந்தால் அதை பயணிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆம்னி பேருந்துகள் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் – கூடுதல் கட்டணம் பெற்றிருந்தால் அதை பயணிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி, அக்டோபர் 28,2016, தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் பெற்றிருந்தால், அவற்றை பயணிகளுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் ஏற்கெனவே 2015-16-ம் ஆண்டுக்கான கட்டண விகிதங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துக் கட்டணங்கள் அதிகரித்து அறிவிக்கப்பட்டன. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி, ஆம்னி பேருந்துகள் 2015-16-ம்

கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

வெள்ளி, அக்டோபர் 28,2016, சென்னை ; தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக,கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜோசப் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிளைட்டன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.அந்தோணி லூயிஸ், எல்.ஜேம்ஸ், ஏ.வில்லிங்டன் ஆகியோர் முன்னிலை

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு கோமாதா பூஜை

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு கோமாதா பூஜை

வியாழன் , அக்டோபர் 27,2016, சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா பூஜை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்களும் பல்வேறு வகையான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.அமைச்சர்களும் பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் தினசரி அப்பல்லோ மருத்துவமனை முன்பு நடைபெறுகிறது. அதிமுக மகளிர் அணியைச்

முதல்வர் ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோபலத்தாலும் மீண்டு வருவார் ; வைரமுத்து

முதல்வர் ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோபலத்தாலும் மீண்டு வருவார் ; வைரமுத்து

வியாழன் , அக்டோபர் 27,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறி்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று கவிஞர் வைரமுத்து  விசாரித்தறிந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க முக்கிய தலைவர்கள், நடிகர், நடிகைகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று டைரக்டர் பாரதி ராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ஷீலா, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் மற்றும் நடிகர், நடிகைகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வருவார் ; இயக்குனர் பாரதிராஜா

முதல்வர் ஜெயலலிதா  பூரண உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வருவார் ; இயக்குனர் பாரதிராஜா

வியாழன் , அக்டோபர் 27,2016, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரிக்க, சினிமா இயக்குனர் பாரதிராஜா இன்று அப்பல்லோ மருத்துவனைக்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பாரதிராஜா கூறியதாவது ;   முதலமைச்சர் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வருவார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மக்களின் பிரார்த்தனையால்தான் அவர் குணமடைந்தார். அதுபோலவே, முதல்வரும் ஜெயலலிதாவும்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரார்த்தனை

வியாழன் , அக்டோபர் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு, முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான கோவில்களில் தினசரி அபிஷேகம், சிறப்பு பூஜை, யாகங்கள், விளக்கு பூஜைகள், கோபூஜை, அன்னதானம் போன்றவை