மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

செவ்வாய்கிழமை, அக்டோபர் 25, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் முழுமையாக குணமடைந்து இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார். காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்கா மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

செவ்வாய், அக்டோபர் 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம்பெற வேண்டி, சென்னை வளசரவாக்கம் பெத்தான்யா நகரில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திரளான அ.இ.அ.தி.மு.க.வினர் சிறப்பு அபிஷேக – ஆராதனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சேலம் மாநகர் மாவட்ட கழகம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில்  செய்திகளை  ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

திங்கள் , அக்டோபர் 24,2016, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீண்டும் நலம் விசாரித்தார்.முதல்வரே இன்னும் ஒரிரு நாட்களில்  ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவார் என்று தா.பாண்டியன் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் இன்று 2-வது முறையாக வந்தார். பாராளுமன்றத்துணை

முதல்வர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர்,தைரியமான பெண்மணி, அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் ; குஷ்பு

முதல்வர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர்,தைரியமான பெண்மணி, அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் ; குஷ்பு

திங்கள் , அக்டோபர் 24,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி

ஞாயிறு, அக்டோபர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துவதாக, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் இதனை தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் சதாசிவம் ஏற்கனவே அப்போலோ வந்துசென்று விட்ட நிலையில்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்,அவருக்காக பிரார்த்திக்கிறேன் ; நடிகை லதா பேட்டி

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்,அவருக்காக  பிரார்த்திக்கிறேன் ; நடிகை லதா பேட்டி

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக தன்னிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்ததாக நடிகை லதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகை லதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம்

முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன் மகா யாகம்

முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன்  மகா யாகம்

ஞாயிறு, அக்டோபர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி 108 வகை மூலிகைகள் மற்றும் நவதானியங்களுடன் மகா வேள்வியும் யாகமும் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சிறப்பு வேள்வி-யாகம் மற்றும்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில்  நாள்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சிறப்பு தொழுகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் அருகேயுள்ள சேங்கல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட சிறப்பு பிரார்த்தனை பேரணி நடைபெற்றது.இதில் அமைச்சர் செல்லூர் கே .ராஜு மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, தமிழக விளையாட்டு வீரர் –

முதலமைச்சர் ஜெயலலிதா 95% குணம் அடைந்துவிட்டார் : மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா 95% குணம் அடைந்துவிட்டார் : மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி பேட்டி

சனி, அக்டோபர் 22,2016, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி இன்று விசாரித்தார். மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் மற்றும் சிகிச்கைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை அப்பல்லோ மருத்துவ மனை தலைவர் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள்