சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை,  சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ மட்டும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்,வேதா நிலையம் அரசு நினைவிடமாக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 18 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர், அவர் உடல்

உழைத்து வந்தவர்கள் நாங்கள், கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

உழைத்து வந்தவர்கள் நாங்கள், கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பேச்சு

ஆகஸ்ட் 17 , 2017 ,வியாழக்கிழமை, கடலூர் : கட்சியின் கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள் நாங்கள். கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்கவும், ஆட்டவும் முடியாது என்று கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்துக்கான விழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். தொழில்துறை

விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

விரைவில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் ; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

ஆகஸ்ட் 16 , 2017 ,புதன்கிழமை, சென்னை : நல்ல நாள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ”அமைச்சரிடம் அரசின் மீது கமல் விமர்சனம் வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த அரசில் குழப்பத்தை விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என பல்வேறு முயற்சிகளில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் கமலும் ஒருவர். அதிமுக அணிகள்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13,000 ஆக உயர்வு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை,  சென்னை : நாட்டின் 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார். பின், அவரது உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முதலமைச்சர் தனது

தொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள் : மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

தொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள் : மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, மதுரை : அட்டை கத்தியோடு யுத்தம் நடத்த வேண்டாம். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சி நடத்துங்கள் என மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார். மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுக (அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது:- எம்ஜிஆர் 1972-ம் ஆண்டில் என்ன காரணத்துக்காக அதிமுகவை தொடங்கினாரோ, அதில் கண்ணும் கருத்துமாக இருந்து 30 ஆண்டுகள் நம்மை

இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

இன்று 71-வது சுதந்திர தினவிழா : கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார்

ஆகஸ்ட் 15 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : 71-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றுகிறார். நாடு முழுவதும் 71-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை காமராசர் சாலையில் கோட்டைக்கு கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 8.30 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மாணவர்கள்,

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை, சென்னை : ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மகாரெஜிமெண்ட் ராணுவ வீரர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச்

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- இரணியனை அழிக்க நரசிம்மனாகவும், ராவணனை அழிக்க ராமனாகவும், கம்சனை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணனாகவும் திருமால் அவதாரம் எடுத்தது ஆன்மிக வரலாறு. ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது மகாபாரதம் கூறும் வீர வரலாறு. அந்த வரலாறுகளை உருவாக்கவும், அதர்மத்தை

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருகட்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருகட்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : கிருஷ்ண ஜெயந்தியில் உலகமெல்லாம் அறம் தழைத்து அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- காக்கும் கடவுள் எனப் போற்றப்படும் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மனித