கண்புரை அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த 23 பேருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவியும்,மாதம் 1000 ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கண்புரை அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த 23 பேருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவியும்,மாதம் 1000 ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , ஜூலை 18,2016, சென்னை : மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்றுபாதிப்பு ஏற்பட்ட 23 நபர்களுக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  மேலும், பார்வை பாதிக்கப்பட்ட 21 பேர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதலவர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு தேசிய கண்ணொளி

77 மீனவர்கள்-102 மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

77 மீனவர்கள்-102 மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கள் , ஜூலை 18,2016, சென்னை : இலங்கை சிறைகளில் உள்ள 77 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய நீர் பகுதியில் மீன் பிடிக்க தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. கடந்த 15-7-2016அன்று ராமநாதபுரம்

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

ஞாயிறு, ஜூலை 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டையில் 140 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 140 பயனாளிகளுக்கு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 20 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஏ.சுந்தரவல்லி, வருவாய்துறை அதிகாரிகள்,

எம்.ஜி.ஆருக்கு 9½ அடி உயர வெண்கல சிலை : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

எம்.ஜி.ஆருக்கு 9½ அடி உயர வெண்கல சிலை : தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

ஞாயிறு, ஜூலை 17,2016, கிராம நிர்வாக அலுவலர் பதவியினை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு 9½ அடி உயர வெண்கல சிலை தேவகோட்டையில் நிறுவப்பட உள்ளதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிறுவனர் மற்றும் கவுரவத்தலைவர் இரா.போசு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் நல சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு

துருக்கியில் தமிழக மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் : முதல்வர் ஜெயலலிதா தகவல்

துருக்கியில் தமிழக மாணவர்கள் பத்திரமாக உள்ளனர் : முதல்வர் ஜெயலலிதா தகவல்

ஞாயிறு, ஜூலை 17,2016, சென்னை: விளையாட்டு போட்டிகளுக்காக துருக்கி சென்றுள்ள மாணவர்களின் பெற்றோர் அவர்களது நிலை குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ள தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 148 மாணவர்கள் துருக்கி சென்றுள்ளனர். அவர்களில் 11 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். துருக்கியில் ராணுவப் புரட்சி தொடர்பாக ஊடகங்களில்

மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்க வேண்டும்,அதிகார மையமாக மத்திய அரசு செயல்படக் கூடாது : டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் வழங்க வேண்டும்,அதிகார மையமாக மத்திய அரசு செயல்படக் கூடாது : டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஜூலை 17,2016, மாநிலங்களுக்கு போதுமான அதிகாரங்கள், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையம் போல செயல்படாமல் கூட்டாட்சித் தத்துவத்தின் நோக்கத்தை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் (ஐஎஸ்சி) பதினோறாவது கூட்டம் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநில நிதியமைச்சர்

சென்னையில் வழிப்பறி சம்பவத்தில் பலியான நந்தினி – சேகர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னையில் வழிப்பறி சம்பவத்தில் பலியான நந்தினி – சேகர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூலை 16,2016, சென்னை  – சென்னை பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி சம்பவத்தின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நந்தினி, சேகர் ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த நஜ்ஜிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., சென்னை, மயிலாப்பூர் வட்டம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த செல்வி . நந்தினி மற்றும் செல்வி நஜ்ஜீ ஆகிய இருவரும் கடந்த

த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

த.மா.கா – வை சேர்ந்த 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

சனி, ஜூலை 16,2016,  சென்னை: த.மா.கா.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடுகளில் தொடர் சோதனை : ரூ.700 கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

சனி, ஜூலை 16,2016, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடி ரூபாய் ரொக்கம், 22 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தி.மு.க.,வைச் சேர்ந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்.இவருக்கு சொந்தமான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லுாரிகள், வீடுகள், அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்கள்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், துபாய் அஜ்மனில் இருந்து மீட்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை அமைச்சர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பிவைத்தார்

சனி, ஜூலை 16,2016, துபாய் அஜ்மனில் பல்வேறு பொய்யான காரணங்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, தமிழகம் திரும்பினர். சென்னை வந்த 12 மீனவர்களை தமிழக அரசு சார்பில் அமைச்சர் திரு.D. ஜெயக்குமார் வரவேற்றார்.  பின்னர் மீனவர்கள், தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் என்ற இடத்தில் இருந்து 2 விசைப் படகுகளில்