நடப்பு ஆண்டில் இதுவரை 36 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.223 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

நடப்பு ஆண்டில் இதுவரை 36 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.223 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  தகவல்

புதன், ஜூலை 06,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி நடப்பு ஆண்டில் 36 ஆயிரத்து ,370  விவசாயிகளுக்கு ரூ.222.82 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜி தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த ஏழை, எளிய

போலி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கைது

போலி சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கைது

செவ்வாய், ஜூலை 05,2016, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜலிங்க குருக்கள் என்பவர், அபூர்வ சக்தி கொண்ட நவபாஷான சிலை தன்னிடம் இருப்பதாகவும், அது 5 கோடி ரூபாய் வரை மதிப்புடையது எனக்கூறி அதனை விற்க முயற்சிப்பதாகவும், தமிழக ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்த சிலையை விற்க ம.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்றச் செயலாளர் சிங்கம், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வி.கே. சுரேஸ் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த ரமேஸ் ஆகியோர்

தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி, சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி,  சிறு, குறு விவசாயிகளின் ரூ.5,780 கோடி கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியீடு

செவ்வாய், ஜூலை 05, சென்னை, தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து, கடன் தள்ளுபடி தொடர்பாக கடந்த மாதம் 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்த விரிவான நெறிமுறைகள் கொண்ட அரசாணையை கூட்டுறவுத்துறை செயலாளர் தற்போது வெளியிட்டுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டு மார்ச்

நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், ஜூலை 05, தி.மு.க. ஆட்சியின்போது, சென்னையில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதுடன், ஒப்பந்தத்தை மீறி சம்பந்தப்பட்ட நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு, நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, சென்னையைச் சேர்ந்த திரு.நெடுமாறன் என்பவரிடம் நிலம் விற்பனை தொடர்பாக மூன்றரைக் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு

கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து : வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

செவ்வாய், ஜூலை 05, சென்னை : கவர்னர் ரோசய்யாவின் 83-வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.  தமிழ்நாடு கவர்னர் ரோசய்யா நேற்று தனது 83-வது பிறந்தநாளை ராஜ்பவனில் கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.  அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது., தங்களது 83-வது பிறந்தநாளான இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்

தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

திங்கட்கிழமை, ஜூலை 04, 2016, கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், கும்பகோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தி.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அக்கட்சிகளில் இருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணி தலைவி சாலோன்சால், மாவட்ட செயலாளர் திரு. தேவசகாயம், இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு. பிரவீன் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர், அக்கட்சியில் இருந்து விலகி

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் : அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் : அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, ஜூலை 04, 2016, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கரூர், திருச்சி, தருமபுரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கரூர் பெரிய பள்ளி வாசலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை, அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கழக

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கிருஷ்ணகிரியில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கிருஷ்ணகிரியில் 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன

திங்கள் , ஜூலை 04,2016, கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சீதனப்பொருட்களும், உணவுகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஏழை-எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 500 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 18 வகையான சீதனப்பொருட்களும், 9 வகையான உணவுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு,அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு,அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

திங்கள் , ஜூலை 04,2016, வேதாரண்யம் அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்படி, அமைச்சர்கள் நேரில் ஆறுதல் கூறினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற காளிதாஸ், கலைபாண்டி மற்றும் வினித் ஆகியோர் கடந்த 15-ம் தேதி மாயமானார்கள். அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், மீனவர்களின் குடும்பத்தினரை மீன்வளத்துறை

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 2271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில்  2271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

திங்கள் , ஜூலை 04,2016, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 271 பயனாளிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழில்சார்ந்த பயனாளிகள், 2 ஆயிரத்து 271 பேருக்கு அமைச்சர்கள் திரு.பி.தங்கமணி, திருமதி.வி.சரோஜா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். திருமண உதவித்திட்டம், விபத்து நிவாரண உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு