குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க  இரு அணிகளுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எல்லா தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க அ.தி.மு.க ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதற்கு நன்றி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார். அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்; உடல்நிலை சரியில்லாததால் முதலமைச்சர் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாரதீய ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஓ.பன்னீர் செல்வம்  அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா அணிசார்பில் நேற்று  கிரீன்வேஸ் கார்டனில் அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக

அம்மா வழியில் நடக்கும் இந்த ஆட்சி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

அம்மா வழியில் நடக்கும் இந்த ஆட்சி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஜூன் 22 , 2017 ,வியாழக்கிழமை, சென்னை : மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் என இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதிமுக அம்மா அணியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் தொழில் மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமைக்கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 22 , 2017 ,வியாழக்கிழமை, சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அறிவித்தார்.அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு முதல்வர் இவ்வாறு அறிவித்தார். ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 14-ம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்

எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை, தஞ்சாவூர் : எம்.எல்.ஏ.,க்கள் பேரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை தேவை என முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் கூறினார். நேற்று தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,கூவத்தூரில்  ‘‘எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலாவுடனான சந்திப்பை தம்பிதுரை தெளிவுப்படுத்த வேண்டும்’’ என்றார் 

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார்,அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது : டிடிவி தினகரன் அதிரடி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார்,அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது : டிடிவி தினகரன் அதிரடி

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை, சென்னை : அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு குறித்து, கழகப் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்வார் என்றும் தினகரன் கூறினார். நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திரு. டிடிவி தினகரன், குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘அ.இ.அ.தி.மு.க. அம்மா’ ஆதரவு யாருக்கு என்பது குறித்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலாதான்

பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியை நம்ப வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

பிளாஸ்டிக் அரிசி என்ற வதந்தியை நம்ப வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

ஜூன்,21 , 2017 ,புதன்கிழமை, சென்னை : தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை. வீண் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்தார். நேற்று  சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ”தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி போன்ற கலப்படங்கள் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பிளாஸ்டிக் அரிசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் முதல் கட்டமாக 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை,ஜூன் 20, 2017,  சென்னை : தமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வாசித்த அறிக்கை: 1.வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும்

இனி செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தலாம் : அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்பு

இனி செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தலாம் : அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை,ஜூன் 20, 2017,  சென்னை : செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டபேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது :- விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின் சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 7.5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 எண்ணிக்கை சூரிய