வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , மே 12,2016, தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டை யாரும் மறக்க முடியாது. வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் என்று சென்னையில் வேன் மூலம் வீதி, வீதியாக நேற்று பிரசாரம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் நேற்று வேன் மூலம் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏ.நூர்ஜஹான்(சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி), பரிதி இளம்வழுதி(எழும்பூர் (தனி)), கே.எஸ்.சீனிவாசன்(துறைமுகம்), டி.ஜெயக்குமார்(ராயபுரம்),

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக பிரசாரம் : பொது மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக பிரசாரம் : பொது மக்கள் உற்சாக வரவேற்பு

வியாழன் , மே 12,2016, சென்னையில் ஒரே நாளில் 16 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் அவருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  கடந்த ஏப்ரல் 4-ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, 9-ந்தேதி தீவுத்திடலில் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.  பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தமிழக அரசியல் களத்தை

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு

செவ்வாய், மே 10,2016, சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர், அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கா.ச.வைரமுத்து, கட்சிக்கு என தனி சின்னம் இல்லாததால் சுயேச்சையாக ,வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டார். வைரமுத்துவை ஆதரித்து நடிகர் கார்த்திக் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வைரமுத்து,

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 14,30000 ஏழை எளிய மக்களுக்கு, 3,256 கோடி ரூபாய் உதவி : முதலமைச்சர் ஜெயலலிதா, ஆதாரங்களுடன் தகவல்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 14,30000 ஏழை எளிய மக்களுக்கு, 3,256 கோடி ரூபாய் உதவி : முதலமைச்சர் ஜெயலலிதா, ஆதாரங்களுடன் தகவல்

செவ்வாய், மே 10,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் நேற்று, வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், லட்சோபலட்சம் மக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் அலைகடலென திரண்டிருந்த பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேராதரவு திரட்டினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கவர்னர் ரோசய்யா அவதூறு வழக்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கவர்னர் ரோசய்யா அவதூறு வழக்கு

செவ்வாய், மே 10,2016, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். தமது பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கு மனுவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அக்னி பரீட்சை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இளங்கோவன்,

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் ஒன்றரை கோடி பறிமுதல் : ரூ. 10 கோடி வரை வரை வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிப்பு

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் ஒன்றரை கோடி பறிமுதல் : ரூ. 10 கோடி வரை வரை வரி ஏய்ப்பு  செய்ததும் கண்டுபிடிப்பு

செவ்வாய், மே 10,2016, கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி. பழனிச்சாமி போட்டியிடுகிறார். கரூரில் உள்ள அவரது லாட்ஜில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய  தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே.சி.பழனி சாமியின் மகன் சிவராமன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 1.5 கோடி பறிமுதல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை – நத்தம் விஸ்வநாதன் பெருமிதம்

செவ்வாய், மே 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தினால் தென்மாநிலங்களில் தமிழகம் மட்டுமே மின்வெட்டில் இருந்து தப்பியுள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சித்தையன்கோட்டை பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் மின்சாரம் இருந்த நேரத்தை விட, மின்வெட்டு இருந்த நேரம் தான் அதிகம் என தெரிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றம் : சென்னையில் இன்று 16 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம்

செவ்வாய், மே 10,2016, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது பிரசாரப் பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் துவங்கும் பிரசாரம், நடேசன் சாலை, ஐஸ்ஹவுஸ், காவல்நிலையம் சந்திப்பு,  திருவல்லிகேணி நெடுஞ்சாலை,  அண்ணாசிலை, வேல்ஸ் தோட்டச்சாலை சாலை, ஈவிகேஎஸ் சம்பத் சாலை, சூளை தபால் நிலையம்,  சூளை நெடுஞ்சாலை, வால்ட்டாக்ஸ் ரோடு சந்திப்பு,

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

செவ்வாய், மே 10,2016, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர்,

‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்’ அரக்கோணம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தாக்கு

‘அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்’ அரக்கோணம் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா தாக்கு

செவ்வாய், மே 10,2016, மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று அரக்கோணம் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா காட்டமாக தாக்கி பேசினார். நேற்று மாலை அரக்கோணத்தில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் அறிக்கையில் இல்லாத