காஞ்சிபுரத்தில் குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

காஞ்சிபுரத்தில் குஷ்புவின் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து சாவு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, காஞ்சிபுரத்தில் குஷ்புவின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படப்பை பகுதியில் மாலை 6.30 மணி அளவில் பிரசாரம் செய்வதாக இருந்தது.  இதற்காக 5 மணிக்கே தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 6.30 மணி

சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சேலம் மாநகர் மாவட்ட செயலர் எம்.கே.செல்வராஜு நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ எம்.கே.செல்வராஜு நீக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:- புதிதாக மாவட்டச் செயலர் நியமிக்கப்படும் வரை, மாவட்டப் பொறுப்பாளர்களாக, மேயர் எஸ்.சவுண்டப்பன், மாவட்ட அவைத் தலைவர் வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு

வெள்ளி, ஏப்ரல் 29,2016, நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக  காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி அறிவித்துள்ளது.   ஐஎன்டியுசி மாநில மூத்தத் துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன் மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:  தமிழகத்தில் மொத்தம் 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக ஐஎன்டியுசி இருக்கிறது. புதிதாக தோன்றிய சிறு கட்சிகளுக்குகூட தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரிய கட்சிகள் வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால், 7 லட்சம் உறுப்பினர்கள் இருந்தும் ஐஎன்டியுசிக்கு காங்கிரஸ் கட்சி

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

வெள்ளி, ஏப்ரல் 29,2016, விழுப்புரத்தில் இன்று ஏப்.29) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.அவரது வருகையை கட்சியினரும், பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிகிறது. தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற

அதிமுக வேட்பாளர்கள் 226 பேரும் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

அதிமுக வேட்பாளர்கள் 226 பேரும் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

வியாழன் , ஏப்ரல் 28,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கோகுல இந்திரா, வைத்திலிங்கம் உட்பட அதிமுக வேட்பாளர்கள் 233 பேரும் இன்று  மதியம் 12.30 மணியளவில், அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திங்கட்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். போடி தொகுதியில் பன்னீர்செல்வம், ஆத்தூர் தொகுதியில்

அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு கடிதம் : வாரிசு அரசியலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுகோள்

அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு கடிதம் : வாரிசு அரசியலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுகோள்

வியாழன் , ஏப்ரல் 28,2016, சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வாக்காளர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்… தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

வியாழன் , ஏப்ரல் 28,2016, உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன் என தொடங்கும் பிரசார சிறுஉரை மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவி வருகிறது.தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை கையாண்டு வருகின்றன.வாக்காளர்களின் வீடுகளுக்கே தொலைக்காட்சிகள் மூலமாகவும், செல்போன்களில் குறுந்தகவல், ‘வாட்ஸ் அப்’ மூலமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. பேஸ்புக், ‘வாட்ஸ் அப்’, டுவிட்டர்

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ஜல்லிக்கட்டை நடத்துவோம்; முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம்: மதுரை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , ஏப்ரல் 28,2016, ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என்று மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார். மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 47 வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:- முல்லை பெரியாறு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

வியாழன் , ஏப்ரல் 28,2016, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதலமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி : மதுரையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஏப்ரல் 28,2016, மதுரையில் 47 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது: குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர் கருணாநிதி. தன்னலம் என்றால் தமிழகத்தையே அடகு வைப்பார் கருணாநிதி பொதுநலம் என்றால் பொறுமைகாப்பார்-.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் முயற்சியால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டது. முல்லை பெரியாறு