கருணாநிதி இலங்கை தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டார் : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

கருணாநிதி இலங்கை தமிழருக்கு  துரோகம் இழைத்துவிட்டார் : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பல கபட நாடகங்களை ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து மேலும் அவர் பேசியது: பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, ஏப்ரல் 23,2016, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள், கருப்புக்கொடி காண்பித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியலில் நான் நடிகர் ரஜினிகாந்தை போல, பயந்து ஓடமாட்டேன் என்று கடந்த வாரம் பேசிய, தே.மு.தி.க., தலைவர் திரு. விஜயகாந்த், நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், விஜயகாந்துக்கு கருப்புக்கொடி காண்பித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் பற்றி தரக்குறைவாக பேசிய விஜயகாந்த்

தி.மு.க.வினர்,முன்பு திருடுவதற்கு திட்டம் போட்டார்கள், இப்போது திட்டத்தையே திருடுகிறார்கள் : விந்தியா கடும் தாக்கு

தி.மு.க.வினர்,முன்பு திருடுவதற்கு திட்டம் போட்டார்கள், இப்போது திட்டத்தையே திருடுகிறார்கள் : விந்தியா கடும் தாக்கு

சனி, ஏப்ரல் 23,2016, தி.மு.க.வினர் முன்பு திருடுவதற்கு திட்டம் போட்டார்கள். இப்போது திட்டங்களையே திருடுகிறார்கள் என்று நடிகை விந்தியா கூறினார். ஜெயலலிதா ஆட்சியில்தான் நல்லது நடக்கும் என்றும் அவர் கூறினார். சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவை ஆதரித்து எம்.எம்.டி.ஏ. காலனியில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெண்கள் பெருமளவில் குவிந்தனர். அந்த பகுதி முழுவதும் ஒரே மக்கள் வண்ணமாக காட்சி அளித்தது.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் நாளை திண்டுக்கல்லில் பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் நாளை திண்டுக்கல்லில் பிரசாரம்

சனி, ஏப்ரல் 23,2016, அ.தி.மு.க. வேட்பாளர் களை ஆதரித்து முதல் கட்டமாக சரத்குமார் திண்டுக்கல்லில் நாளை முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருச்செந்தூர் தொகுதியில் ஏற்கனவே அவர் தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் முதல் கட்டமாக திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 24-ந்தேதி (நாளை) முதல் 26-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம்

சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது ஏன்? : நாஞ்சில் சம்பத் கேள்வி

சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது ஏன்? : நாஞ்சில் சம்பத் கேள்வி

சனி, ஏப்ரல் 23,2016, சட்டமன்றத்திற்கு வராத கருணாநிதி எதற்காக முதல்வர் இருக்கைக்கு ஏன் ஆசைப்படுகிறார் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வியெழுப்பி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாகவும், அதனால் அடுத்த தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி விட்டதாகவும் தெரிவித்தார்.  ஆனால், மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில்

இன்று திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார்

இன்று  திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார்

சனி, ஏப்ரல் 23,2016, முதல்வர் ஜெயலலிதா இன்று  திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 19 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எழுச்சியுரையாற்றுகிறார். கடந்த 9-ம் தேதி அன்று சென்னை தீவுத்திடலில் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இங்கு லட்சோபலட்சம் மக்கள் ஜெயலலிதாவின் எழுச்சியுரையை கேட்க திரண்டிருந்தனர். எதிர்பார்த்ததைவிட அதிக அளவு கூட்டம் வந்தது. தீவுத்திடலில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி உட்பட 20 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் அமுலு விஜயனை மாற்றக் கோரி, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி  வேட்பாளர் அமுலு விஜயனை மாற்றக் கோரி, திமுகவினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2016, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  கே.வி.குப்பம் தனித் தொகுதியில் போட்டியிட 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்த நிலையில், குடியாத்தம் அடுத்த கல்லூரை சேர்ந்த அமுலு விஜயன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதனை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். தொகுதியை சாராதவரும், படிப்பறிவு இல்லாதவருமான

குன்னூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரிஆ.ராசாவின் கார் மீது திமுக தொண்டர்கள் செருப்பு மற்றும் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு

குன்னூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரிஆ.ராசாவின் கார் மீது திமுக தொண்டர்கள் செருப்பு மற்றும் கல் வீசி தாக்கியதால் பரபரப்பு

வெள்ளி, ஏப்ரல் 22,2016, குன்னூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி கோத்தகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசாவின் கார் மீது செருப்பு மற்றும் கல் வீசி தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் தொகுதி திமுக வேட்பாளராக முபாரக் அறிவிக்கபட்டுள்ளார். அவரை மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் ராமசந்திரனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் இன்று கோத்தகிரியில் உள்ள ஒரு அரங்கில் தி.மு.க வேட்பாளர் முபாரக் தலைமையில் அக்கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சர்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் LED திரை மூலம் ஒளிபரப்பி, நூதன முறையில் பிரச்சாரம்: பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் LED திரை மூலம் ஒளிபரப்பி,  நூதன முறையில் பிரச்சாரம்: பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் குறும்படங்களை, அகண்ட LED திரை மூலம் ஒளிபரப்பி, ஆர்.கே.நகர் தொகுதியில் நூதன முறையில் பிரச்சாரம் செய்துவருவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடும் வடசென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று, முதலமைச்சரின் சரித்திர சாதனைகளையும் எண்ணற்ற நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்கு

அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016, அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடிகர் ராமராஜன் மேல்விஷாரம் நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து, மேல்விஷாரம் கத்தியவாடி சாலை சந்திப்பில் நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கினார். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை