தி.மு.க. பன்னாட்டு கம்பெனி போல் இயங்கி வருகிறது : நாஞ்சில் சம்பத் பேச்சு

தி.மு.க. பன்னாட்டு கம்பெனி போல் இயங்கி வருகிறது : நாஞ்சில் சம்பத் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2016, நெல்லை டவுன் தேரடி திடலில் அ.தி.மு.க. அரசின் 5 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துக்கருப்பன் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் தகுதி இல்லாத பலர் நான்தான் முதல்–அமைச்சர் என்று பேசி வருகிறார்கள். அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை மக்கள் விரும்பி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா,விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் : அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில், பிரேமலதா மீது வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணம் வாங்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் வகையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியிருப்பது குறித்து, அ.இ.அ.தி.மு.க. அளித்த புகாரின்பேரில் பிரேமலதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி, கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாகவும் பிரேமலதா மீது, தேர்தல் அதிகாரியிடம் அ.இ.அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டமன்றப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருநெல்வேலியில் நடைபெற்ற

அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயக கட்சி :தமிமுன் அன்சாரி அறிவிப்பு

அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயக கட்சி :தமிமுன் அன்சாரி அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 27,2016, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மஜக தொடங்கப்பட்ட 4-வது நாளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில், எங்களின் முதல் அரசியல் மாநாட்டை சென்னை துரைப்பாக்கத்தில் நடத்துகிறோம். இந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மாநாட்டில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசுவார் என்று நம்புகிறோம். அப்போது, எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து முதல்வரிடம்

அதிமுகவுக்கு 473 கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

அதிமுகவுக்கு 473 கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

ஞாயிறு, மார்ச் 27,2016, அதிமுகவுக்கு மேலும் 134 சிறு கட்சிகள், அமைப்புகள் நேற்று ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது. அதிமுகவுக்கு பல்வேறு சிறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்காக 640-க்கும் மேற்பட்டவர்கள் நேரம் கேட்டு கடிதம் அளித்துள்ளனர். முதலில் 34, தொடர்ந்து 55, அதன் பிறகு 50 என 139 சிறு கட்சிகள், அமைப்புகள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்தன.

திருநெல்வேலி முகைதீன் ஆண்டவர் தர்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் நன்றி

திருநெல்வேலி முகைதீன் ஆண்டவர் தர்காவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் நன்றி

ஞாயிறு, மார்ச் 27,2016, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டதால் மகிழ்ச்சியடைந்துள்ள இஸ்லாமியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டல்புதூரில், முகைதீன் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இதனை தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்தது. இந்த தர்காவிற்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வருகை தருகின்றனர். இந்நிலையில், தர்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக, அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை : மின்மிகை மாநிலமாக விளங்கும் தமிழகம், மத்திய தொகுப்புக்கும் மின்சாரம் வழங்கி சாதனை

தமிழ்நாட்டில் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை : மின்மிகை மாநிலமாக விளங்கும் தமிழகம், மத்திய தொகுப்புக்கும் மின்சாரம் வழங்கி சாதனை

ஞாயிறு, மார்ச் 27,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு, பல முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியை கையாள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படத் தொடங்கியிருப்பதன் மூலம் தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்காலத்தில் சமாளிக்க வழிவகை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 10,796 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 10,796 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி

ஞாயிறு, மார்ச் 27,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய நடவடிக்கையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 5 ஆண்டுகளில் 10 ஆயிரத்து 796 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்கவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை

அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணல்

அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணல்

ஞாயிறு, மார்ச் 27,2016, அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று 6-வது நாளாக வேட்பாளர் நேர்காணலை நடத்தினார். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் விருப்பமனு வாங்கப்பட்டது. மொத்தம் 26,174 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 21-ந்தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடந்து வருகிறது. நேற்று 6-வது நாளாக நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போன தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போன தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, மார்ச் 27,2016, பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமரை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், குண்டுவெடிப்பிற்கு பின் காணாமல் போனதாக கருதப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் பற்றி தகவல் எதுவும் தெரியாமல், அவரது உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கணேசனை கண்டுபிடிக்க உதவிடுமாறு, அவரது பெற்றோர் தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, எனவே கணேசனை தேடும் பணியில்

கும்பகோணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி விரைவு நீதிமன்றம் திறப்பு : முதலமைச்சருக்கு வழக்கறிஞர்கள் நன்றி

கும்பகோணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி விரைவு நீதிமன்றம் திறப்பு : முதலமைச்சருக்கு வழக்கறிஞர்கள் நன்றி

ஞாயிறு, மார்ச் 27,2016, கும்பகோணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி விரைவு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது. இதற்காக வழக்கறிஞர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். கும்பகோணம் திருவிடைமருதூர், பாபநாசம் தாலுக்கா பகுதி, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா, கும்பகோணத்தில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், புதிய கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் திரு. நாகமுத்து நேற்று