முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

வியாழன் , மார்ச் 17,2016, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில் அழிவின் விளிம்புக்கு சென்ற நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளதாக பாராட்டு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரத்து 500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள்,

ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

வியாழன் , மார்ச் 17,2016, ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்துள்ளதன் மூலம், மனநலம் பாதித்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதலமைச்சருக்கு தர்ஹா நிர்வாகிகளும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில், மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனநோய் நீங்க பிரார்த்தனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.

வரும் தேர்தலில் திராவிட தேச கட்சி மற்றும் ஆதி திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

வரும் தேர்தலில் திராவிட தேச கட்சி மற்றும் ஆதி திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

திராவிட தேச கட்சி தலைவர் வி.கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு உத்தரவிட்டவர் ஜெயலலிதா. திருமலை நாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி பல லட்சம் தெலுங்கு மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு திராவிட தேச கட்சி ஆதரவு அளிக்கிறது.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில

குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன், மார்ச் 17,2016, ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் கவுன்சிலரான ஜாண்ரோஸ் தலைமையில் 100–பேர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை தளவாய் சுந்தரம் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவட்டார் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதர்சன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் குற்றியார் நிமால், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், ஏற்றக்கோடு ஊராட்சி

காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

வியாழன் , மார்ச் 17,2016, செயல் திறனற்ற “தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு’ என்று சொல்ல நினைத்து வாய்தவறி செயல்திறனற்ற “ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தார். அவரது வார்த்தைப் பிறழ்வைக் கண்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தெலங்கானா பிரிந்து சென்றதால் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று அந்த மாநில

தமிழகத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தும் சிறப்புத் திட்டம் : இந்தியா முழுவதும் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. எம்.பி, விஜிலா சத்தியானந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தும் சிறப்புத் திட்டம் : இந்தியா முழுவதும் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. எம்.பி, விஜிலா சத்தியானந்த் வலியுறுத்தல்

வியாழன் , மார்ச் 17,2016, மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அ.இ.அ.தி.மு.க. எம்.பி., திருமதி. விஜிலா சத்தியானந்த், தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்க, பெண் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தி, அதன் பலன் அக்குழந்தையின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் வகையிலான முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் மக்கள்தொகை சமநிலை ஏற்படும் என்றும், இதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும்

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஏழை, எளிய மக்களை  பாதிக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வியாழன் , மார்ச் 17,2016, பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் மாதாந்திர செலவு உயரும். அதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- எண்ணெய் நிறுவனங்கள் 17.3.2016 (இன்று) முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 7 காசு என்ற அளவிலும், டீசல் விலையை 1 ரூபாய் 90 காசு என்ற

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘104’ சேவை மையம் இதுவரை 6½ லட்சம் பேர் பயன்

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘104’ சேவை மையம் இதுவரை  6½ லட்சம் பேர் பயன்

புதன், மார்ச் 16,2016, முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘104’ சேவை மையத்துக்கு 26 மாதங்களில் 16 லட்சத்து 34 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.இதில் 6½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.இந்த சேவை மையங்களில் தொடர்பு கொண்டு பயன் அடைந்த பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்து கொண்டனர். கடந்த ஆண்டு மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இந்த மையத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.‘104’ தொலைபேசி மருத்துவ உதவி சேவை மையத்தை

அ.இ.அ.தி.மு.க கழக நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை கலைநிகழ்ச்சிகள் நடத்தி நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

அ.இ.அ.தி.மு.க கழக நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை கலைநிகழ்ச்சிகள் நடத்தி நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

புதன், மார்ச் 16,2016, அ.இ.அ.தி.மு.க. அரசின் வரலாற்று சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கலைநிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு, ஏழை-எளியோருக்கு செயல்படுத்திவரும் எண்ணற்றத் திட்டங்கள், வரலாற்ற சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழகம் முழுவதும்

ஜல்லிக்கட்டு : தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்மறுப்பு

ஜல்லிக்கட்டு : தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்மறுப்பு

புதன், மார்ச் 16,2016, தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்ததுடன், விசாரணையை ஜூலை 26–ந் தேதிக்கு ஒத்திவைத்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை