தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

வெள்ளி, மார்ச் 11,2016, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்துடன்கூடிய இரு சக்கர வாகனங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சியினருக்கு இலவசமாக வழங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது உருவப்படத்துடன், நெல்லை மத்திய மாவட்டக் கழகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்கள், வாக்காளர்களுக்கு இன்று காலை விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் அ.இ.அ.தி.மு,க.வினர்

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் : தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் :  தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளபோதிலும்,  தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தாம் விரும்பும் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது, தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கே.சி.பழனிசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016, ‘தமிழகத்தில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பது’ என, முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் போசு கூறியதாவது: சட்டசபை தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களிடம் மாவட்ட வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஆறு மாவட்டங்களில் நடந்த ஆலோசனையில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

‘தொடங்கட்டும், தொடரட்டும்’ எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

‘தொடங்கட்டும், தொடரட்டும்’  எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

வியாழன் , மார்ச் 10,2016, `தொடங்கட்டும்.. தொடரட்டும்..’ என்ற பிரச்சார வாசகங்களுடன் திருநெல்வேலியில் களமிறங்கியி ருக்கிறார் அதிமுக பேச்சாளர் எம்.சி.அப்துல்காதர். திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த இவர், தற்போது தினமும் 40 கி.மீ. தூரத்துக்கு சைக்கிளில் சுற்றிவந்து கட்சி நிர்வாகிகள், பேச்சாளர்களை சந்தித்து உற்சாகமூட்டி வருகிறார். மேலப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளராகவும், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அப்துல்காதர், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2001-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

வியாழன் , மார்ச் 10,2016, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில், 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவிகள், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கி வருவதால், கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

வியாழன் , மார்ச் 10,2016, ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 7–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம்

​மருத்துவ பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

​மருத்துவ பொது நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

வியாழன் , மார்ச் 10,2016, மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மீண்டும் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: மருத்துவப் படிப்புகளில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுவை மத்திய அரசு திரும்பப்

தேர்தல் நேரத்தில், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது : நடிகர் ராதாரவி பேச்சு

தேர்தல் நேரத்தில், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது : நடிகர் ராதாரவி பேச்சு

புதன், மார்ச் 09,2016, தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அதிமுக ஆதரவாளரான நடிகர் ராதாரவி பழனிக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் அதிமுக அரசு

அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது

அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது

புதன், மார்ச் 09,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. சார்பில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. 234 தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் வகையில், வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து, கழக நிர்வாகிகளுக்கு கையேடுகள் வழங்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. மோக வெற்றிபெறும் வகையில், ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில்

தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

தூத்துக்குடி மாவட்ட சிறுவணிக வியாபாரிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 09,2016, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் சிறுவணிகர்களுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுவணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் முற்றிலும் முடங்கியதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது திகைத்தனர். எனினும், முதலமைச்சர் செல்வி