தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

சனி, மார்ச் 05,2016, தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஏராளமான தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தே தீக்குச்சிக்கான அட்டைபெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கைகளினால் அட்டைபெட்டி தயாரிப்பதில் குறைந்த வருமானமே கிடைத்து வந்தது. இவர்களின் குறையை களையும் வகையில், மாவட்ட அரசு தொழில் மையம் மூலம் இயந்திரத்தால் அட்டை பெட்டி தயாரிக்கும் உற்பத்தி மையம் அமைக்க

அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் தொடக்கம்:தமிழக அரசு புதிய அறிவிப்பு

சனி, மார்ச் 05,2016, அரசு இ சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் போலீஸ் புகார்களையும் வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது குறித்து அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு அரசு இ-சேவை மையங்களில் கூடுதல் சேவைகள் துவக்கம் தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அரசின் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இச்சேவை மையங்களில் தற்பொழுது கூடுதலாக கீழ்க்காணும் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. பிறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 200 நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன

சனி, மார்ச் 05,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் சாவகாட்டுப்பாளையத்தில் 200 கைத்தறி நெசவாளர்களுக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெசவாளர்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள், மின் ராட்டைகள், ஜக்காடு தறி பெட்டி, மானியக்கடன்கள், நெசவாளர் காப்பீடு திட்டம், நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், ஈரோடு

நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கும் பணி தொடங்கியது

நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கும் பணி தொடங்கியது

சனி, மார்ச் 05,2016, நாகை மாவட்டத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் மற்றும் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில், ஆறுகள் மற்றும் கிளை ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்நிலையில், திருமங்கலத்தில் உள்ள விக்கிரமன் ஆற்றின் குறுக்கே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை, மாதிரிமங்கலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் தடுப்பணை, கொத்தங்குடியில் வீரசோழனாற்றின்

மக்களவை முன்னாள் சபாநாயகர் P.A.சங்மா மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

மக்களவை முன்னாள் சபாநாயகர் P.A.சங்மா மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

சனி, மார்ச் 05,2016, முன்னாள் மக்களவை சபாநாயகர் திரு.P.A. சங்மாவின் மறைவு குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீண்டகால அரசியல்வாதியும், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.P.A. சங்மா இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். திரு.சங்மா மக்களவை சபாநாயகராகவும், மேகாலய மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளதோடு, அவரது நீண்டகால அரசியல் வரலாற்றில் பல்வேறு துறைகளின் மத்திய

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

சனி, மார்ச் 05,2016, தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 22-ஆம் தேதியும், மேற்கு வங்கம் – மே 29, கேரளம் – மே 31, புதுச்சேரி – ஜூன் 2, அஸ்ஸாம் – ஜூன் 6ஆம்

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

வெள்ளி, மார்ச் 04,2016, தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல்தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும்,மனுவை

தமிழத்தில் முதன் முறையாக சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

தமிழத்தில் முதன் முறையாக சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

வெள்ளி, மார்ச் 04,2016, தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கை ஜெயாவிற்கு இதற்கான பணி நியமான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் வசித்து வருபவர் திருநங்கை ஜெயப்பிரகாஷ் என்ற ஜெயா,23. இவருக்கு, கொளத்தூர் ஊராட்சி ஏர்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளி, மார்ச் 04,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில், கருவுற்ற தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலில் கருவுற்ற தாய்மார்கள் 150 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு வகை வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 04,2016, “சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் சேர மாட்டோம். காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமாகா மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பது தொடர்பான வழிகாட்டு நூல்களை வெளியிட்டு, வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்னை குறித்து