ரூ.100 கோடியில் ஏரிகளை சீரமைக்கும் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

ரூ.100 கோடியில் ஏரிகளை சீரமைக்கும் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017, சென்னை : தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திட, 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017, சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு அதிமுக கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து தனியாகப் பிரிந்த ஓ.பி.எஸ். அணியில் இப்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலுள்ள ஓ.பி.எஸ். இல்லத்துக்கு

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017, சென்னை : சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த கே.சங்கரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சங்கரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய

அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவர் மதுசூதனன் : ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு

அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவர் மதுசூதனன் :  ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 12, 2017, சென்னை : அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன், மனோ ரஞ்சிதம், மாணிக்கம் உள்ளிட்டோர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சிமன்றக் குழுவுக்கான அறிவிப்பை மதுசூதனன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: கட்சியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் அணியில் ‘போட்டா போட்டி’

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் அணியில் ‘போட்டா போட்டி’

ஞாயிறு, மார்ச் 12, 2017, சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட ‘போட்டா போட்டி’ நிலவுகிறது.  முதலச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட நிறைய பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில்

இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும் : ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும் : ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, மார்ச் 12, 2017, ராமநாதபுரம் : துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் தெரிவித்து, ‘‘மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வலியுறுத்துவேன்’’ என்றார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜோவின் உடலுக்கு மலர்வளையம்

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது : ஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது பாராட்டு

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது : ஓ.பன்னீர் செல்வத்துக்கு குவிகிறது பாராட்டு

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.இதனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாராட்டுக்கள் குவிகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அம்மா கல்வியகம்’ (www.ammakalviyagam.in) எனும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன், அதிமுகவின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதனால் உருவாக்கப்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிங்கப்பூர், ஜப்பான் தூதர்கள் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சிங்கப்பூர், ஜப்பான் தூதர்கள் சந்திப்பு

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, சென்னை : முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேற்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் தூதர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். முதலமைச்சராக பொறுப்பேற்றமைக்காக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரின் வாழ்த்துக் கடிதத்தை சிங்கப்பூர் தூதர் முதலமைச்சரிடம் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதர்  ராய் கோ மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து சிங்கப்பூர்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் : தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, சென்னை : அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்கறிஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், ”கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடைபெற்றுள்ளன. அவைத்தலைவராக இருந்த

ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, சென்னை : சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர்,நேற்று தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-உண்மையான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் சசிகலாவை ஏற்கவில்லை. அதனால் எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை. இதுவரையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்ப்பதற்காக இதுவரையில் எந்த வியூகமும் வகுக்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாகும்.