வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்;நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசை மகத்தான வெற்றி பெறச்செய்வோம்;நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு

சனி, டிசம்பர் 26, தமிழகத்தில், வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் ஜெயலலிதா, நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, மகத்தான வெற்றியை பெறுவது என நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாமக்கல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளின் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மோகனூர், அணியாபுரம், வாழவந்தி உள்ளிட்ட 24 ஊராட்சிகளைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள், பல்வேறு இடங்களில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் திரு. P. தங்கமணி

ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

ஸ்ரீரங்கம் கட்டிட விபத்து: பலியான 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படிதலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

சனி, டிசம்பர் 26, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், கட்டட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள் நேரில் வழங்கப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் உள்ள மேலஉத்தரவீதியில், கட்டுமானப் பணி நடைபெற்றபோது, ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி,

திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி – பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி – பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, டிசம்பர் 26, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. விலையில்லா நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பொதுமக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் திரு. நத்தம் ஆர்.விசுவநாதன், 7,387 பயனாளிகளுக்கு தலா 4

அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தொடங்கிய பொருட்காட்சி – திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தொடங்கிய பொருட்காட்சி – திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

சனி, டிசம்பர் 26,2015, அரசு திட்டங்ககளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரசு பொருட்காட்சி திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் அரங்குகள் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த கடந்த 2 ஆண்டுகளாக அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறையும் இக்கண்காட்சிககு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசின் நலத்திட்ட உதவிகள், நகர்புற வளர்ச்சி, தொழில்வளம், அறிவியல் வேளாண்மை உள்ளிட்ட 27 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, டிசம்பர் 26,2015, சென்னை;காவல் துறைக்கான அலைவரிசைக் கட்டணத்தை செலுத்துவதற்கு மாநில போலீசாருக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூ.140 கோடி பாக்கி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:– நாட்டிலேயே மிகச் சிறந்த காவல் துறைகளின் ஒன்றான தமிழக காவல் துறைக்கு நவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள்

நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள்

வெள்ளி, டிசம்பர் 25, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலப்பாளையத்தில் நடைபெற்ற தொற்றுநோய் தடுப்பு முகாமை மேயர் திருமதி புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு. ராஜேந்திரன் தலைமையில் 8 மருத்துவர்கள், 36 சுகாதார செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொற்று நோய் தடுப்பு குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குடிநீரில் குளோரின் கலப்பதின் அவசியம்,

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி

வெள்ளி, டிசம்பர் 25, அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 28-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, ‘‘முதல்வர் ஜெய லலிதா தலைமையில் அவருக்கு எந்நாளும் விசுவாசத் தொண்டர் களாக இருப்போம், முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம், பொய்ப் பிரச்சாரங்களால் அரசியல் மறுவாழ்வு பெற முயற்சிக்கும் எதிர்மறை அரசியல் சக்திகளின் சதியை முறியடிப்போம், வரும்

தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி வழங்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி வழங்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

வெள்ளி, டிசம்பர் 25, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் கிராமபுற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் பெண்களின் சுயமுன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். ஒட்டபிடாரத்தில் உள்ள கிராமப்புற ஏழைப்பெண்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் இலவசமாக ஆடை வடிமைப்பு பயற்சி அளிக்கப்படுகிறது. ஒருமாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் 30 பெண்கள் பங்கேற்றுள்ளனர். இலவச பயிற்சி நிறைவடைந்தவுடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், இந்த பயிற்சி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 25, தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவல்துறை அலுவலகக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஆகியவற்றை மறு சீரமைப்பது தொடர்பான தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை கட்டடங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள்,

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, டிசம்பர் 25, சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் . மாணிக் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளத்தால்