சொன்னதை செய்கின்ற ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான்:மாணவர்களுக்கு ரூ.3.7 கோடியில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரை

சொன்னதை செய்கின்ற ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான்:மாணவர்களுக்கு ரூ.3.7 கோடியில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரை

சனி, டிசம்பர் 19,2015, சென்னை : விருதுநகர் மாவட்டத்தில் 14 பள்ளிகளை சேர்ந்த  2171 மாணவர்களுக்கு ரூ. 3.7 கோடி899 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர்  சிறப்புத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில், திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 91 பேருக்கும், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் வழங்கினர்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் வழங்கினர்

சனி, டிசம்பர் 19,2015, கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் நபர்களுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் செல்லாங்குப்பத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் வழங்கினார்கள். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பாக செல்லாங்குப்பத்தில் அம்மன் கோயில் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நிலவேம்பு

வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30,000 மெட்ரிக் டன் அரிசி, 19,100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30,000 மெட்ரிக் டன் அரிசி, 19,100 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, டிசம்பர் 19,2015, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட அதிக அளவு பெய்து இருப்பதை தாங்கள் அறிவீர்கள். இந்த பலத்த மழையால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க் கையில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை மத்திய அரசு, ‘‘மிகப்

வெள்ளம் பாதித்த பகுதியில் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி:தொற்று நோயை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

வெள்ளம் பாதித்த பகுதியில் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி:தொற்று நோயை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை

சனி, டிசம்பர் 19,2015, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை கொட்டித் தீர்த்தது. மழை பாதிப்புகளால் தொற்று நோய் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான களக்காட்டுர், விப்பேடு, ஐயங்கார்குளம், சதாவரம் மற்றும் சிறுகாவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதேபோல் காஞ்சிபுரம் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி சுகாதார துறையின் சார்பில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க தமிழக அரசு  ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு

சனி, டிசம்பர் 19,2015, சென்னை –  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுபாலங்களை சீரமைக்க ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; அண்மையில் பெய்த மழையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 17.ம்தேதி  அன்று, நெடுஞ்சாலைகள்மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் அரசு முதன்மை செயலர், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப்பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இரு

மழையின் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் உத்தரவுப்படி ரூ.28 லட்சம் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

மழையின் காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் உத்தரவுப்படி  ரூ.28 லட்சம் அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

வெள்ளி ,டிசம்பர்,18, 2015, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் மற்றும் மாரடைப்பில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி காசோலைகளை வழங்கினார். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னைமயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தயாளன் மற்றும் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் பாஸ்கர், கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 41 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 41 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

வெள்ளி, டிசம்பர் 18,2015, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தமிழக  மீனவர்கள் 4 பேரை கடந்த  17-ந்தேதி இலங்கை கடற்படை பிடித்து சென்று விட்டது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.  பாக்ஜல சந்தியில் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் அமைதியாக மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை கடற்படை அத்துமீறலுடன் நடந்து கொள்வது துரதிர்ஷ்ட வசமானது. சமீபத்தில் பிடித்து செல் லப்பட்டுள்ள

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை, 1,550 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை, 1,550 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, டிசம்பர் 18,2015, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் உயர்கல்விக்கான, தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,550 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வுக்கு பின், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், உயர்கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது; இத்திட்டத்திற்காக, தமிழக அரசு,

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் : சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் ஆகியவை அமோக விளைச்சல் கண்டுள்ளன. சிறைக்கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மறுமலர்ச்சி அடையச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, தொடங்கி வைத்த சிறை அங்காடிகளில் கைதிகள் தயாரிக்கும் சோப்பு, சோப்புத்தூள், ரெடிமேடு ஆடைகள், இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி மத்திய

மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நடைபெற்ற மீட்புப் பணிகளின் போது, ராணுவத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகச்சிறப்பான முறையில், ஒத்துழைப்பு அளித்ததாக லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தாம்பரம், முடிச்சசூர், வேளச்சேரி, வளசரவாக்கம், கோட்டூர்புரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்திய ராணுவத்தினர் மிகச்சிறப்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலமைச்சர்  ஜெயலலிதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட உரையிலும் ராணுவத்தினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில்,