வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

செவ்வாய், நவம்பர்,24-2015 வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ராமநநாதபுரத்தில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்கனமழையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.    

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

செவ்வாய், நவம்பர்,24-2015 பலத்த மழையால், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக லாரிகள் இயக்கப்படும் என்று சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஞாயிற்றுக்கிழமை வரை 86 கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் இயக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக 20 ஊர்திகள் பயன்படுத்தப்படும். தேவையான அளவு வாகனங்கள் இருக்கிறது என்றார். இதுகுறித்து

கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்-24-2015 சென்னை, வெள்ளத்தில் மூழ்கி, சுவர் இடிந்து விழுந்து, மின்னல் தாக்கியது என கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் சின்னசாமி; பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த பூபாலனின்

மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

23 november 2015   செங்குன்றம், பலத்த மழையின் காரணமாக மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளான பிரகாஷ் நகர், கணபதி நகர், சந்திரபிரபு காலனி, சீதாபதி நகர், வெங்கடசாய்நகர், ஆசிரியர்கள் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் அந்த பகுதியில்

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

23 november 2015 வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது,

தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

23 november 2015 அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவருமான திரு.காஞ்சி A.வீரமணி உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு திரு.காஞ்சி வீரமணி, தலைமைக் கழகப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும்,

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

23 November 2015 கனமழை காரணமாக, சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததையடுத்து, அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை நகரில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே இந்த கடைகளுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காய்கறி விலையை கட்டுப்படுத்த மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை பிரபல தமிழ் நாளிதழ் பாராட்டு தெரிவித்து, தலையங்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக ரூ. 940 கோடி வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று,  முதல்கட்டமாக ரூ. 940 கோடி  வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

23 November 2015                     தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட உயிர் பலி மற்றும் சேதங்களுக்கு நிவாரண நிதியாக உடனடியாக தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.                     கடிதத்தில்,தமிழகத்தில் உடனடி

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

திங்கள், 23 நவம்பர் 2015 அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் புதிய நி்ர்வாகிகளை தமிழக முதல்வரும், அதிமுக  பொது செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  அதில், தேமுதிகவில் இருந்து தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்த பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனுக்கு, அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார். அது போல, ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதிக்கும், மேலும், இதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்த பொன்னையனுக்கும் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி

வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

nov,23/2o15                                                               சென்னை: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்கனமழையினால் சேதமடைந்த குடிசைவீடுகளுக்கு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருந்தங்கல் நகராட்சியில் கனமழையின் காரணமாக பகுதி சேதமடைந்த 12 குடிசைவீடுகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.4100 வீதம் ரூ.49200 ம், முழுவதும் சேதமடைந்த 3 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5000ஃ- வீதம் ரூ.15000ஃ-ம் தலா 10 கிலோ அரிசியும்,