மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; குடியரசுத் தலைவரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; குடியரசுத் தலைவரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதன்கிழமை, மார்ச் 01, 2017, புதுடெல்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அது தொடர்பாக மத்திய அரசு மூலம் நீதி விசாரணையோ அல்லது மத்திய புலனாய்வுத் துறை விசாரணையோ நடத்த உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு அணி அதிமுக எம்.பி.க்கள் குழு நேற்று நேரில் வலியுறுத்தியது. இதுதொடர்பாக அவர்கள் தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் நேற்று

செங்கோட்டையன் பொய் சொல்கிறார் : அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றச்சாட்டு

செங்கோட்டையன் பொய் சொல்கிறார் : அதிமுக எம்.பி மைத்ரேயன் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017, புது டெல்லி : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மைத்ரேயன் தலைமையிலான 12 எம்பிக்கள் சந்தித்து  வலியுறுத்தினர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.பி மைத்ரேயன்,மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவை பார்த்ததாக செங்கோட்டையன் சொல்வது உண்மையல்ல. அது பொய்.ஆளுநர் வித்யாசாகர் ராவ், பா.ஜ.க தலைவர் அமித் ஷா,ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெயலலிதா அவர்களை சந்திக்க அப்பொல்லோ மருத்துவமனை

படகு கவிழ்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் : தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி அமைச்சர்கள் நேரில் ஆறுதல்

படகு கவிழ்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் : தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி அமைச்சர்கள் நேரில்  ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017, தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கடல் பகுதியில் நேற்று முன்தினம் தனியார் படகில் சவாரி சென்றபோது படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கடல் பகுதியில் மீனவர்களுடன் கடலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர்களில் 10

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு ; 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய தமிழக அரசு நடவடிக்கை

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு ; 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய தமிழக அரசு நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017, சென்னை : தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் Henk Bekedam, மத்திய சுகாதாரத்துறையின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு செயலாளர் திருமதி செளம்யா சுவாமிநாதன் ஆகியோர் நேற்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் Henk Bekedam, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை அழிக்க நினைப்பவர்களை மக்கள் அரசியலில் இருந்து அகற்றிவிடுவார்கள் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை அழிக்க நினைப்பவர்களை மக்கள் அரசியலில் இருந்து அகற்றிவிடுவார்கள் : ஓ.பன்னீர்செல்வம்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை அழிக்க நினைப்பவர்களை தமிழக மக்கள் அரசியலில் இருந்து அகற்றிவிடுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும், ஜெயலலிதாவின் புகழை காவல்துறை மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைக்க நினைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகம் எங்கும் ஊர்வலம், கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும்

தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தி,பிரதமர் மோடியிடம் 106 பக்க கோரிக்கை மனுவை அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தி,பிரதமர் மோடியிடம் 106 பக்க கோரிக்கை மனுவை அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017, புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சந்தித்து தமிழக கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் 106 பக்க கோரிக்கை மனுவை வழங்கினார்.  அவரது கோரிக்கைகளை பிரதமர் கவனமாக கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுங்கள் : பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுங்கள் : பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, புதுடில்லி : தமிழகத்தில் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும்  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இன்று டில்லி சென்றிருந்த முதல்வர் எடைப்பாடி பழனி்சாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு

தீபா, தீபக் இருவரும் யாரென்று எனக்கு தெரியாது : தம்பிதுரை

தீபா, தீபக் இருவரும் யாரென்று எனக்கு தெரியாது : தம்பிதுரை

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, சென்னை : ”தீபா யாரென்று எனக்கு தெரியாது,” என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். சில தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசுகையில், ‘தீபக்கா யாரது, அ.தி.மு.க.,வில் இருக்கிறாரா… எனக்கு அவரை பற்றி தெரியாது’ என தம்பிதுரை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையம் வந்த தம்பிதுரையிடம், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்ற, அரசியல் அமைப்பை, ஜெ., அண்ணன் மகள் தீபா துவக்கி உள்ளது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

திருவாரூர் விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ. 179 கோடி ஒதுக்கீடு : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திருவாரூர் விவசாயிகளுக்கு வறட்சி நிதியாக ரூ. 179 கோடி ஒதுக்கீடு : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, திருவாரூர் : திருவாரூரில் வறட்சி நிவாரண நிதியாக 179 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நேற்று மன்னார்குடியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், மருத்துவ காப்பீடு மூலம் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை தரப்படுகிறது என்றார். மருத்துவத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்திய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக கூறினார். திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வறட்சி நிவாரண நிதியாக 179

மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்

மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017, குற்றவாளிகளையே கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை என அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள், தெய்வமாகப் போற்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவை குறைசொல்ல, குற்றவாளிகளைக் கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை என, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தி.மு.க.வினர் பற்றி நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும் என்றும் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மறைந்த