தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் 8 இடங்களில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. தூத்துக்குடி வட்டம் கூட்டுடன்காடு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆழிகுடி, கோவில்பட்டி வட்டம் அகிலாண்டபுரம், விளாத்திகுளம் வட்டம் பெரியசாமிபுரம், எட்டயபுரம் வட்டம் சிங்கிலிபட்டி, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியபுரம், திருச்செந்தூர் வட்டம் லட்சுமிபுரம், வாகைவிளை, சாத்தான்குளம் வட்டம் பிடானேரி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் முதியோர்

ரூ.101 கோடி செலவில் கால்நடை, மீன்வளத்துறை சார்பில் கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.101 கோடி செலவில் கால்நடை, மீன்வளத்துறை சார்பில் கட்டடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

19 நவம்பர் 2015 தமிழகத்தில், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழகத்தி், மீன்வளத்துறை சார்பில் 101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்,  கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையக் கட்டடங்கள், மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும்  ஆராய்ச்சி மைய கட்டடம்,

சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சுவர் இடிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ரூ 32 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

19 November 2015 சென்னை, தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக உயிரிழந்த மேலும் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீரில் மூழ்கி பலி தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் மகன் திருமலை, சென்னை மாவட்டம், பெரம்பூர் பி.வி. காலனியைச்

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை, நவ. 18 மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சேத விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்கும்படி நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப்

மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை:சேதம் குறித்து கணக்கெடுப்பு விரைந்து நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

November 18, 2015                                மழையால் பயிர்சேதம், வீடுகள், குடிசைகள், கால்நடை, படகுகள் இழப்பு கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.                                                         இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் பருவமழை தொடங்கும் முன்னரே அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.                                    இருப்பினும் ஒரே நாளில் அதிகளவு மழை கொட்டித்தீர்க்கும் போது, பாதிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. கடலூரில் மின் விநியோகம், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. 70 நிவாரண

கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

18 November 2015                  வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.                                         இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வளர்மதி, பி. தங்கமணி, எஸ். கேகுல இந்திரா, கே.டி. ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், முக்கியத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.                     ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்தும்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

18 November 2015                                கனமழையால் சேதமடைந்த 15 வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகளை  சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.                      இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக பேரிடர்களின் போது வழங்கப்படும் அரசின் நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி வழங்கியதோடு மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.                  அதனைத் தொடர்ந்து சென்னை

மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

18 November 2015 மழை-வெள்ளத்தில் சிக்கி பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி, அரக்கோணம் அமீர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கெங்க மந்திரி, புளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 4 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். இதேபோல், வேலூர்

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

18 November 2015 சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தக் கடைகள் கூடுதலாக திறக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இரண்டு நகரும் கடைகள் சென்னை மாநகரில் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

17 November 2015                     மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கொட்டிதீர்த்துள்ள நிலையில் கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜி.கே வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது.என்று கூறினார்.