மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் அம்மா,செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் ; மிலாதுநபி திருநாளில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  உறுதி

செவ்வாய், டிசம்பர் 13,2016, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் “மிலாதுன் நபி” வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, இஸ்லாமியர்களுக்காக செயல்படுத்திய அனைத்து நலத்திட்டங்களையும் அம்மா அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது; புரட்சித் தலைவி அம்மா இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணற்றவை ஆகும். உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, புனித

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ; ரஜினிகாந்த்

திங்கள் , டிசம்பர் 12,2016, சென்னை, பொதுவாழ்க்கைக்காகத் தனது சொந்த வாழ்க்கையே தியாகம் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்று நடிகர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி ஆகியோருக்கு நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள், மூத்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த ஜெயலலிதா மற்றும் சோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் ; பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

திங்கள் , டிசம்பர் 12,2016, சென்னை ; மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா  நினைவிடத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து குடும்பம், குடும்பமாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நடிகை த்ரிஷா தனது தாயாருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் கடந்த 6-ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப் பட்டது. அன்று முதலே வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தகோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

திங்கள் , டிசம்பர் 12,2016, இலங்கை கடற்படையினர், தமிழக அப்பாவி ஏழை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக,ஒ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மீனவர் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரையில் தீர்வு எட்டப்படாததால், தமிழக

வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

வார்தா புயல்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் : முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனை

திங்கள் , டிசம்பர் 12,2016, ‘வார்தா’ புயல் இன்று பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். சென்னை அருகே 440 கி.மீ தொலையில் மையம் கொண்டிருக்கிறது வார்தா புயல். இது  இன்று சென்னை அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எண்ணூர் துறைமுகத்தில் 10ம்

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல்

போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி மரணமடைந்த பின்னர் அவரது நினைவிடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர் . அதன் பின்னர் அவர்கள் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வீட்டுக்கு வருகின்றனர்.போயஸ் தோட்ட இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுத பொதுமக்கள், தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். நேற்று காலை போயஸ் தோட்ட இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  படத்துக்கு

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் ; முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை திருமதி. V.K.சசிகலா ஏற்க அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை; துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் அம்மா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்து, அம்மா அவர்களின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சின்னம்மா . எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் அம்மா  சந்தித்த காலகட்டங்களில், அம்மா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் ; அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை, நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைப்பதற்கு கோரிக்கை, நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு மரியாதை செலுத்தும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் : தமிழக அமைச்சரவையில் தீர்மானம்

ஞாயிறு, டிசம்பர் 11,2016, சென்னை : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று பகல் 11-30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்ஜமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மறைந்த

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 203 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை கேட்டு உயிரிழந்த 203 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சனி, டிசம்பர் 10,2016, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்தும், முதலமைச்சர் மண் உலகை பிரிந்து சென்றார் என்ற செய்தியை கேட்டும், மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்து மரணமடைந்த 203 பேரின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 6 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை, 11 டிசம்பர் 2016      தமிழகம் அ+