முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் : பொன்னையன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் : பொன்னையன் தகவல்

ஞாயிறு, டிசம்பர் 04,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டதாகவும்,அதை எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நி லையில், முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர்  பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுவிட்டார். அவருக்கு நுரையீரல்

ஒரே ஆண்டில் 16 லட்சம் பேருக்கு வேலை ; அமைச்சர் அன்பழகன் தகவல்

ஒரே ஆண்டில் 16 லட்சம் பேருக்கு வேலை ; அமைச்சர் அன்பழகன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016, சென்னை ; ஒரே ஆண்டில் 37 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூலம் 16 லட்சம் பேர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான வித்யாசாகர்ராவ் தலைமை

108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016, 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் சிக்கியவர்களுக்கு Golden Hour என்பது

செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம்

செல்லாத நோட்டு நடைமுறைக்குப் பிறகு 40 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ; தமிழக அரசு விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016, செல்லாத ரூபாய் நோட்டு நடைமுறைக்குப் பிறகும்,தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், கூட்டுறவு வங்கிகளில் 40 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.148 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 32,430 விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தாமலேயே விவசாய இடுபொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயர்மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் வாங்குவதற்கும், அதனை வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையால் கூட்டுறவு

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர். பி உதயகுமார் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு ஆர். பி உதயகுமார் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2016, சென்னை ; வடகிழக்கு பருவமழை குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு,  ஆர்.பி. .உதயகுமார்  தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது. பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை பொழிவினை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், முதலமைச்சர் 110-வது விதியின்கீழ் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும்

ஜி.எஸ்.டி மசோதா, தமிழகத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் ; அமைச்சர் பாண்டியராஜன்

ஜி.எஸ்.டி மசோதா, தமிழகத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் ; அமைச்சர் பாண்டியராஜன்

சனி, டிசம்பர் 03,2016, விரைவில் அறிமுகபடுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் தமிழகத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல் செய்வது தொடர்பாக தில்லியில் இன்று மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை என்பது 18 விதமான வரிகளை உள்ளடக்கியது.  நான்கு

80 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் ; நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

80 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் ; நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

சனி, டிசம்பர் 03,2016, ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சோலார் மின் பம்பு செட்டுகள் அமைக்க நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 விவசாயிகளுக்கு சோலார் மின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 80 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் இந்த நிதிவுதவி திட்டத்தின் மூலமாக மா,

முதலமைச்சர் ஜெயலலிதா உடற்பயிற்சிகளை தானாகவே செய்தார் ; விரைவில் எழுந்து நடக்க தொடங்குவார்

முதலமைச்சர் ஜெயலலிதா உடற்பயிற்சிகளை தானாகவே செய்தார் ; விரைவில் எழுந்து நடக்க தொடங்குவார்

சனி, டிசம்பர் 03,2016, தமிழக முதலமைச்சர் முதலமைச்சர் ஜெயலலிதா உடற்பயிற்சிகளை தானாகவே செய்தார்.இதனால் அவர் விரைவில் எழுந்து நடக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந் நிலையில்  ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி, ஜெயலலிதா பேரவை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் லட்ச தீப பிரார்த்தனை நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

வெள்ளி, டிசம்பர் 02,2016, கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர பகுதி மீனவ சமுதாய மக்கள் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பல நூற்றாண்டுகளாக சென்று வருகிறார்கள்.

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – ‘நாடா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ; அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – ‘நாடா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ; அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

வெள்ளி, டிசம்பர் 02,2016, நடா புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புயல் தொடர்பாக சமூக வலைதளம் உட்பட பிறவற்றின் மூலம் வரும் உண்மையில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடா புயலைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர்