முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுந்து நிற்க பயிற்சி ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுந்து நிற்க பயிற்சி ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

திங்கள் , நவம்பர் 28,2016, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க நேற்று பயிற்சி அளிக்கப்பட்டதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று 67–ம் நாளாக சிகிச்சை பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி  திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிறு, நவம்பர் 27,2016, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று  வருகின்றன. கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொள்ளாச்சியில் உள்ள பிரசித்திபெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அமைச்சர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

ஞாயிறு, நவம்பர் 27,2016,  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. எனவே, இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்தார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அவர் சிகிச்சை பெற்று வரும் அறையில்

தேடிச் சென்று மனுக்களை வாங்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ; பொது மக்கள் பாராட்டு

தேடிச் சென்று மனுக்களை வாங்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ; பொது மக்கள் பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 27,2016, கரூர் மாவட்டத்தில் உள்ள குறைகளை குறித்து மக்களிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை வாங்கினார். கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் பல பகுதிகளில் மக்களின் குறைகளை கிராம வாரியாக கேட்டறிந்தார். கரூர் அருகே குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர், தோகைமலை, பில்லூர், வடசேரி, நெய்தலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 300

55 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் ; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

55 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் ; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

ஞாயிறு, நவம்பர் 27,2016, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாவட்டம், பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.48 லட்சம் மதிப்பில் 55 விவசாயிகளுக்கு பயிர்க்கடனை வழங்கினார். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :- மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லுபடியாகாது என்று அறிவித்ததை தொடர்ந்து,  முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாகவும், வேளாண் சார்ந்த பணிகளுக்கு உதவிடும் வகையிலும் தொடக்க வேளாண்மை

ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ஞாயிறு, நவம்பர் 27,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரொக்கமாக பயிர்க்கடன் வழங்கும் விழா, பல்வேறு இடங்களில் நடைபெற்றது. பயிர்க்கடன் பெற்றுக்கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அ.வெள்ளோடு, அடியனூத்து, கூவனூத்து, பாகாநத்தம், பட்டிவீரன்பட்டி ஆகிய கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 43 விவசாயிகளுக்கு 24 லட்சத்து 80 ஆயிரம்

அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைத் திட்டங்களில் மகத்தான திட்டமான அம்மா திட்ட சிறப்பு முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. இதில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்தல் போன்ற மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்ப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், “மக்களைத் தேடி அரசு” என்ற உன்னத நோக்கத்தின்கீழ், தமிழகம் முழுவதும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முதலிடம் ; முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அப்பலோ மருத்துவமனை தலைவர்   பிரதாப் சி ரெட்டி பாராட்டு

சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் நாட்டையே உலகின் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளதாக அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். உடலுறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அளவில் உடலுறுப்பு தானம் அளிக்கும் விகிதம் 10 லட்சம் பேருக்கு பூஜ்ஜியம் புள்ளி ஆறு என்ற அளவில்

குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவு

சனி, நவம்பர் 26,2016, சென்னை, அனைத்து குடிசை வாழ் மக்களுக்கும் வீடு வழங்குவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். குடிசைமாற்று வாரிய மாதாந்திர ஆய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த 16 நபர்களுக்கு ரூ.2000/ காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். அக்கூட்டத்தில், குடிசைமாற்று வாரிய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை

நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் ; அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு

சனி, நவம்பர் 26,2016, பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினி மயமாக்குவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, 318 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்திருப்பதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார் என்றும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.இரா.காமராஜ் தெரிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை அண்ணா மேலாண்மை நிறுவன கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், உதவி ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் மற்றும்