முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

ஞாயிறு, அக்டோபர் 30,2016, முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனை முன்பாக அதிமுக தொண்டர்கள் இன்று மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் பெறவேண்டி தமிழகம்

முதல்வர் நலமுடன் இருக்கிறார் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் ; நடிகர் செந்தில்

முதல்வர் நலமுடன் இருக்கிறார் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் ; நடிகர் செந்தில்

ஞாயிறு, அக்டோபர் 30,2016, சென்னை : சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், முதல்வர் நலமுடன் இருப்பதால் விரைவில் மக்கள் பணியில் ஈடுபடுவார் என்றும் நடிகர் செந்தில் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்  நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரிப்பதற்காக திரைப்பட நடிகர்கள் செந்தில், சிங்கமுத்து,

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஞாயிறு, அக்டோபர் 30,2016, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு, செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் கழக வேட்பாளர் திரு. V. செந்தில்பாலாஜி

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் ; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் ; அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஞாயிறு, அக்டோபர் 30,2016, சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிகக் கட்டணம் வசூலித்த 15 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் உரிய கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்ட

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சனி, அக்டோபர் 29,2016, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் உடனடியாக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர்களுக்கு, செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. A.K. போஸை ஆதரித்து, கழகத்தினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். திருநகர், பூங்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை ஆதரித்து,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ; பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ; பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்

சனி, அக்டோபர் 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.பயனாளிகள் புதிய வீட்டில் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்து வந்த 35 குடும்பங்கள் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரும்படி, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், குடிசை மாற்றுவாரியம் சார்பில், நாவலூர் விரிவாக்க திட்டத்தின் கீழ், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருநாவுக்கரசர் நன்றி

தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திருநாவுக்கரசர் நன்றி

சனி, அக்டோபர் 29,2016, தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.கிண்டியில் உள்ள சிப்காட் தலைமை அலுவலகத்தை மத்திய அரசு    மாற்ற முயற்சிக்கிறது,  இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் ; அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்

சனி, அக்டோபர் 29,2016, சென்னை – தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் 3 தொகுதிகளிலும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வரும் 19-ம் தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து அன்றாட பணிகளை செய்வார் ; ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து அன்றாட பணிகளை செய்வார் ; ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங்

சனி, அக்டோபர் 29,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,நேற்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பலர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம்சிங், நியூஸ்–7 நிர்வாக இயக்குனர் வி.வி.எம்.சுப்பிரமணியன், நடிகர் ஓ.ஏ.கே.சுந்தர், பரதநாட்டிய

முதல்வர் ஜெயலலிதா பூரண நலன் வேண்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா பூரண நலன் வேண்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  சிறப்பு வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 28,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலன் பெற்று மீண்டு தனது மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியைத் தொடர வேண்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இன்று காலை  தனது மனைவியுடன் ஸ்ரீஆண்டாள் கோவில் வந்த அமைச்சர் பாண்டியராஜனை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர்