முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு

வியாழன் , அக்டோபர் 06,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எற்பட்ட உடல் நலக்குறைவு காரணமா கடந்த 22ந் தேதி இரவு முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப  வேண்டி கரூர் மாவட்ட அதிமுக.வினர் வேள்வி நடத்தியும் கோவில்களில் சிறப்பு அபிசேகங்கள் செய்தும்  வழிபாடு செய்தனர். கரூரில் வெங்கமேடு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

வியாழன் , அக்டோபர் 06,2016, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர், ஆலிம்களோடு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும் முன்னாள் வக்ப் வாரியத்தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இந்த பிரார்த்தனையின்போது தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்., அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இஸ்லாமிய சமூகத்திற்காக நல்ல பல திட்டங்களை அள்ளித்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை

புதன்கிழமை, அக்டோபர் 05, 2016, தமிழக முதல்வர் உடல்நலம் குணம் பெற்று விரைவில் பணிக்கு திரும்பவேண்டி நெல்லை டவுன் பாட்டபத்து நர்சரி பள்ளியில் மாணவ, மாணவிகள் சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி, ஆயிரம் அகல் விளக்கு எற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயிரம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,பிரதமரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,பிரதமரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு

செவ்வாய், அக்டோபர் 04,2016, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தி நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், கடந்த 1-ம் தேதியிலிருந்து 6-ம்

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை

செவ்வாய், அக்டோபர் 04,2016, சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பெற்றவர் திருப்பூர் குமரன். இளைஞனாக இருந்தபோதே, வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டங்களை முன்னின்று நடத்திய அவர், ஆங்கிலேயர் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.

உள்ளாட்சித் தேர்தல் திடீர் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் திடீர் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், அக்டோபர் 04,2016, தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக, அக்டோபர் 17, 19-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று, செப்டம்பர் 26-ஆம் தேதி மாநிலத் தேர்தல்

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

செவ்வாய், அக்டோபர் 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக அதிமுக தலைவர்கள் தன்னிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சென்றார். அ.தி.மு.க மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முதல்வர்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், அக்டோபர் 04,2016, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர

காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடுகிறார் : லட்சியத் தி.மு.க. டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடுகிறார் : லட்சியத் தி.மு.க. டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

செவ்வாய், அக்டோபர் 04,2016, காவிரிப் பிரச்சனையில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடி வருவதாக லட்சியத் தி.மு.க. தலைவர்  டி.ராஜேந்தர் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர்,காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று உரிமைக்குரல் கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா,ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர், அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் என் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் நான் பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை.நான் தஞ்சை மாவட்டக்காரன், காரி கலக்கும் பூம்புகாருக்கும் பக்கத்துக்கு

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

திங்கள் , அக்டோபர் 03,2016, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், வரும் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் எண்ணற்ற சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி 8-ஆவது வார்டில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திருவொற்றியூர்,