ரூ.3000 உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.3000 உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர்  ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின் பொருளாதாரம் சிறக்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும், தொழிற்கல்வி அவசியம்  என்பதால், எனது தலைமையிலான அரசு  தொழிற்கல்வியை ஊக்குவிப்பதிலும், தொழிற்  திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில்

விபத்தில் மரணமடைந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் ; ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

விபத்தில் மரணமடைந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் ; ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை ; சாலை விபத்தில் மரணமடைந்த திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம் கண்டிய கவுன்டனூர் அ.தி.மு.க கிளைக்கழக செயலாளர் வி.முத்துசாமி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார்.மேலும் விபத்தில் இறந்த அந்த அ.தி.மு.க.நிர்வாகி குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ 3லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.  அ.தி.மு.க பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,  திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழக்கு ஒன்றியம் கண்டிய கவுன்டனூர் கிளைக்கழக

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 21,2016, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் ரூ.14 கோடியே 20 லட்சம் செலவில் நவீன இயந்திரங்கள் நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘பூம்புகார்’ என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களால்  செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதன், செப்டம்பர் 21,2016, புதுடெல்லி ; காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு இன்று முதல் 6000 கன அடி வீதம் 27-ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகத்தான வெற்றியாகும். காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

புதன், செப்டம்பர் 21,2016, சென்னை ; சைதாப்பேட்டை சின்னமலை – விமான நிலையம்  இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரெயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, மேட்டூர் ; மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு செப்.20ம் தேதி நீர்திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலையில் 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, மின்வாரியம், போக்குவரத்து துறை, சமூக நலத்துறை, சுற்றுசூழல்துறை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்

செவ்வாய், செப்டம்பர் 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய பயண ஏற்பாட்டாளர்களின் 32-வது மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலா அமைச்சக செயலர் விநோத், தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. வெல்லமண்டி N.நடராஜன், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சுற்றலாத்துறையை மேம்படுத்த எடுத்துள்ள பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் பயனாக

தமிழக அரசு செயல்படுத்தும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமையளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரகுநாத ரெட்டி பாராட்டு

தமிழக அரசு செயல்படுத்தும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமையளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரகுநாத ரெட்டி பாராட்டு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, தமிழ் வளர்ச்சித் துறை மேம்பாட்டுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது என ஆந்திர மாநில அமைச்சர் பி. ரகுநாத ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட பி.ரகுநாதரெட்டி, ஆந்திர சட்டப் பேரவைத் துணைத் தலைவர் புத்த பிரசாத், அரசின் ஆலோசகர் பி.பிரபாகர், உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று திங்கள்கிழமை வந்தனர். இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கல்வி- ஆய்வுப்

45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய், செப்டம்பர் 20,2016, சென்னை, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.45 லட்சம் மதிப்பீ்டடில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மேட்டுத்திடல், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆஸ்ரமத்திற்கு 3,634 சதுர அடி பரப்பளவில் கூடுதல் வகுப்பறைகள் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கும், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, அருள்மிகு பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய

ரூ.2.50 கோடி செலவில் 10000 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.2.50 கோடி செலவில் 10000 திருக்கோயில்களுக்கு  பூஜை உபகரணங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, சென்னை, ரூ.2.50 கோடி செலவில் பத்தாயிரம் திருக்கோயில்களில் ஒரு காலப் பூஜைக்காக பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, விளக்கு மற்றும் தொங்கு விளக்கு போன்ற  உபகரணங்கள்  வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- திருக்கோயில்களில் நிதி பற்றாக்குறை காரணமாக தினசரி ஒரு வேளை கூட பூஜை நடைபெறாத திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது நடைபெற வேண்டுமென்ற நோக்கில் “ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம்”