தூத்துக்குடியில் பண்ணை பசுமை கடைகள் மூலம் 2 ஆண்டுகளில், 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை ; சாதனை விழாவில், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு பங்கேற்பு

தூத்துக்குடியில் பண்ணை பசுமை கடைகள் மூலம் 2 ஆண்டுகளில், 10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை ; சாதனை விழாவில், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு பங்கேற்பு

செவ்வாய், செப்டம்பர் 13,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சிறப்பான திட்டமான பண்ணை பசுமை காய்கறி கடை, தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 2 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்க்கு இந்த கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏழை-எளியோருக்கு மலிவான விலையில் தரமான பசுமையான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடை திட்டத்தை தொடங்கி, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் முக்கிய நகரங்களில்

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் : கர்நாடக முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், செப்டம்பர் 13,2016, சென்னை ; கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் வழங்கபடும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், அங்கு வசிக்கும் பல லட்சம் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்களது சொத்து

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 2-வது நாளாக அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளை அழிக்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 2-வது நாளாக அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளை அழிக்கும் பணி தீவிரம்

செவ்வாய், செப்டம்பர் 13,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் 2-ஆவது நாளாக நேற்றும் “ஸ்கைரோனமஸ்” பூச்சி ஒழிப்புப் பணிகளை, அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து பொதுமக்களிடமும் கேட்டறிந்தனர். சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகர், கொரட்டூர், சீனிவாசபுரம், காந்திநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் “ஸ்கைரோனமஸ்” எனப்படும் ஒருவகை பூச்சிகள் திடீரென அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக கட்சிப் பொறுப்பிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 13,2016, அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளிலிருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை நீக்கம் செய்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கழக செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் திரு. நத்தம் இரா.விஸ்வநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுதாக அறிவித்துள்ளார்.

காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி

செவ்வாய், செப்டம்பர் 13,2016, காவேரி விவகாரத்தில் சட்டப்போராட்டங்கள் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து,நேற்று நடந்த தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவேரி பிரச்சனையில் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் ; பக்ரித் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் ; பக்ரித் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு  முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

செவ்வாய், செப்டம்பர் 13,2016, சென்னை ; உலகெங்கும் இறை உணர்வும், தியாகச் சிந்தனைகளும் பரவட்டும் அமைதியும், மகிழ்ச்சியும் மலரட்டும் என்று இஸ்லாமியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் திருநாள்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  வாழ்த்துச் செய்தி; இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும்  திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனே எல்லாம்,

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டவர் முதலமைச்சர் ஜெயலலிதா ; சினிமா பிஆர்ஓ யூனியன் பாராட்டு

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டவர் முதலமைச்சர் ஜெயலலிதா ; சினிமா பிஆர்ஓ யூனியன் பாராட்டு

திங்கள் , செப்டம்பர் 12,2016, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையைப் பெற்று தந்தவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று சினிமா பிஆர்ஓ யூனியன் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஆர்ஓ யூனியன் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையைப் பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி

கொரட்டூர் ஏரியில் பூச்சி தொல்லையை தடுக்க நடவடிக்கை ; முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மேயர் சைதை துரைசாமி நேரில் ஆய்வு

கொரட்டூர் ஏரியில் பூச்சி தொல்லையை தடுக்க நடவடிக்கை ; முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மேயர் சைதை துரைசாமி நேரில் ஆய்வு

திங்கள் , செப்டம்பர் 12,2016, கொரட்டூர் ஏரியை சுற்றிலும் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சியால் ஏற்படும் தொல்லையை ஒழிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர், மூகாம்பிகை நகர், கொரட்டூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் “ஸ்கைரோனமஸ்” எனப்படும் ஒருவகை பூச்சிகள் திடீரென அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவ்வகை பூச்சிகளை ஒழிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கொரட்டூர் ஏரி மற்றும் சீனிவாசபுரம்

முதலமைச்சர் ஜெயலலிதா,காவேரி பிரச்னையில்,சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா,காவேரி பிரச்னையில்,சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு

திங்கள் , செப்டம்பர் 12,2016, காவேரி பிரச்னையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சரியான அணுகுமுறையைக் கடைபிடித்து வருவதாக, மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டியது, கர்நாடக மாநில அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை என்ற இடத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள், சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன்,

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அ.தி.மு.க.சார்பில் அஞ்சலி

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அ.தி.மு.க.சார்பில் அஞ்சலி

திங்கள் , செப்டம்பர் 12,2016, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரனின் 59-வது நினைவு நாளையொட்டி, பரமக்குடியில் நேற்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரன் 59-ஆவது நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அ.அன்வர்ராஜா, சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.முத்தையா உள்ளிட்டோர், இமானுவேல் சேகரன் மகள்