ரூ.2 கோடி செலவில் கொருக்குப்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.2 கோடி செலவில் கொருக்குப்பேட்டையில் அம்மா சுற்றுச்சூழல் பூங்கா : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை:ரூ.2 கோடி செலவில் சென்னை கொருக்குப்பேட்டையில் ‘அம்மா சுற்றுச் சூழல் பூங்கா’அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இது தொடர்பாக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுற்றுச்சூழல் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இந்தமாமன்றத்தில் அறிவிப்பதில் நான்பெருமகிழ்ச்சி அடைகிறேன். இயற்கை எழிலோடு கூடிய ஏரிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், நிலத்தடி நீர் பாதுகாக்கவும் பயன்படுகின்றன. எனவே, ஏரிகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும்

சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கென 50கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை குறித்தான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்த வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கான புதிய தொழிற்பேட்டைகள் 36கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிறுவப்படும் என்று

நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை;நடப்பு ஆண்டில் பார்வையற்ற 5 ஆயிரம் பேருக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஒர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக் கல்வி அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவி ஏற்பு

புதன், ஆகஸ்ட் 31,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா புதிய மாற்றங்களை மேற்கொண்டார். பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக க.பாண்டியராஜன் நியமிக்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரோசய்யா, பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ராஜ்பவனில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று பதவியேற்றார். நேற்று மாலை நடைபெற்ற

டென் சிங் நார்கே தேசிய சாகச விருது பெறும் வான் சாகச வீரர் ராஜ்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

டென் சிங் நார்கே தேசிய சாகச விருது பெறும் வான் சாகச வீரர் ராஜ்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016, சென்னை ; வான் டைவிங்கில்,  சாதனை படைத்த தமிழக வீரர் ராஜ்குமாருக்கு டென் சிங் நார்கே தேசிய சாகச விருது அளிக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேசிய விருது பெறும் அவருக்கு முதல்வர்  ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா அந்த வீரருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் பரிந்துரைப்படி, இந்திய அரசு, டென் சிங் நார்கே தேசிய சாகச விருது 2015க்கு உங்களை தேர்வு செய்துள்ளது 

தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு ; போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு ; போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016, தமிழகத்தில் முதன்முறையாக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தில் அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் திருச்சி, மதுரை, சேலம், ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என தெரிவித்தார். அரசு போக்குவரத்து

திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க ரூ.108 கோடி செலவில் 90,150 கழிப்பிடங்கள் கட்டப்படும் ; சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க ரூ.108 கோடி செலவில் 90,150 கழிப்பிடங்கள்  கட்டப்படும் ; சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016, பேரூராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தலை அறவே நீக்க 90,150 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில்முதல்வர் ஜெயலலிதா 110–விதியின் கீழ் கூறியதாவது:– * திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் வகையில் இந்த ஆண்டு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,25,352 தனி குடியிருப்பு கழிவறைகள் ரூ.150 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், மொத்தம் 2,184 இருக்கைகள் கொண்ட சமுதாய

ரூ.100 கோடியில் பசுமைத்தோட்டத்துடன் 500 கிராம ஊராட்சிகளில் பூங்காக்கள் அமைக்கப்படும் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.100 கோடியில் பசுமைத்தோட்டத்துடன் 500 கிராம ஊராட்சிகளில் பூங்காக்கள் அமைக்கப்படும் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016, ரூ.100 கோடியில் பசுமைத்தோட்டத்துடன் கூடிய 500 அம்மா பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், ரூ.50 கோடியில் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் நேற்று போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா 110-விதியின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 14 திட்டங்களை அறிவித்து, பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதிகளில்,

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமனம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமனம் ;  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 30,2016, சென்னை  – முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் இன்று மாலையில் கவர்னர் மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இது குறித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- பால் வளம்-பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில்

பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஆகஸ்ட் 29,2016, பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர்  ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110ன் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 8.35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. பால் குளிர்விக்கும் அறைகளின் திறன் நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் குளிர்விக்கும் அறைகள் பல்வேறு