தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

வெள்ளி, ஜூலை 29,2016, அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று  பட்ஜெட் மீது 4-வது நாளாக விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி இருந்ததாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட

முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு

வெள்ளி, ஜூலை 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருவதாக, சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மனிதநேய ஜனநாய மக்கள் கட்சி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழகத்தில், முதலமைச்சர்  ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக திகழ்ந்து வருவதாக பாராட்டுத் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஜூலை 29,2016, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அதிமுகவினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார். பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 31,834 தொண்டர்களுக்கு  உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்,முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது:- அதிமுகவில் இணைந்துள்ளோரின் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும். அனைவரும் இன்றைக்கு உள்ள உற்சாகத்தோடு

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் : அத்தனை பேர் வாழ்விலும் புது வசந்தம் மலரும் என முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் : அத்தனை பேர் வாழ்விலும் புது வசந்தம் மலரும் என முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஜூலை 29,2016, சென்னை : சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திமுக, காங்கிரஸ், , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 31,834 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் சென்னை, ராயப்பேட்டையில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா, தேமுதிக, ம.தி.முக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள்

கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த திரு. செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த திரு. சிவக்குமார் அரசன் ஆகியோர் மீது கத்தார் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக

அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க இடம் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நன்றி

அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைக்க இடம் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நன்றி

வியாழன் , ஜூலை 28,2016, ராமேசுவரம்  – அப்துல்கலாம் நினைவிடத்தில் மணி மண்டபம், அருங்காட்சியகம் போன்றவற்றை கட்டுவதற்கு கேட்ட இடத்தை விட, கூடுதல் இடத்தை ஒதுக்கி தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய மந்திரி வெங்கையாநாயுடு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் அப்துல்கலாம் என்று சிலை திறப்பு விழாவில் பேசினார். அப்துல்கலாம் சிலை திறப்பு விழாவில் மத்திய மந்திரி வெங்கையாநாயுடு பேசியதாவது:- இந்த விழாவில் வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் தொன்மை வாய்ந்த

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016, ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 26.7.2016 அன்று 14 செ.மீ அளவுக்கு பெய்த கன மழையின் காரணமாக மூக்காண்டப்பள்ளி அருகே ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் புகுந்ததால், அண்ணாநகர் பகுதியைச்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : அமெரிக்க மருத்துவ குழுவினர் பாராட்டு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் : அமெரிக்க மருத்துவ குழுவினர் பாராட்டு

புதன்கிழமை, ஜூலை 27, 2016, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிகிச்சை பெற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம், தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் கட்டணமின்றி தரமான சிகிச்சை பெற்று பயனமடைந்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் சம்பத்

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் சம்பத்

புதன், ஜூலை 27,2016, நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எழிலரசன் பேசும்போது, நோக்கியா தொழிற்சாலை தமிழகத்திலிருந்து சென்றுவிட்டது. ஒரு ஆலையை மூடிவிட்டுச்செல்வது என்றால் முறைப்படி அரசுக்குத் தெரிவித்துவிட்டு, அதற்கு அரசு அனுமதித்ததற்குப் பிறகே செல்ல முடியும். அப்படி ஒரு நடைமுறை நடைபெற்றதா என்று கேள்வி எழுப்பினார். அப்போது, தொழில்துறை அமைச்சர்

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் : திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் : திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

புதன், ஜூலை 27,2016, திருப்பூர்  – தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அவர்கள் இருவருமே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் ஆர்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட