திமுகவை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன்,தமாகாவை சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன்,தமாகாவை சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

புதன், ஜூலை 27,2016, நெல்லை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தமாகாவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் ஞானசேகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த கருப்பசாமி பாண்டியனும், ஞானசேகரனும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். கருப்பசாமி பாண்டியன் 1972 முதல் 1996 வரை அதிமுகவில் கிராம கிளைச் செயலாளர் முதல் மாநில துணைச் செயலாளர் வரை கருப்பசாமி பாண்டியன் பல்வேறு பதவிகளை

முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கையிலிருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை: எஞ்சிய மீனவர்கள் ஓரிரு நாள்களில் விடுதலையாவர்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கையிலிருந்து 43 தமிழக மீனவர்கள் விடுதலை: எஞ்சிய மீனவர்கள் ஓரிரு நாள்களில் விடுதலையாவர்கள்

புதன், ஜூலை 27,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில்  உள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சார்ந்த  77 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஆணையிட்டு, முதல்கட்டமாக 25.7.2016  அன்று 43 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மீனவர்கள் இன்னும்  ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் அரசு திட்டங்கள் மக்களை தேடி சென்றடைகின்றது : சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் அரசு திட்டங்கள்  மக்களை தேடி சென்றடைகின்றது : சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல்

செவ்வாய், ஜூலை 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மக்களை தேடி அரசு திட்டங்கள் சென்றடைந்தன என சட்டபேரவையில் அமைச்சர் திரு. ஆர்.பி உதயகுமார் கூறினார். சட்டபேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திரு. ஆர்.பி உதயகுமார், அரசு நலத்திட்டங்களை பெற அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலைமாறி, மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரில் சென்று நலத்திட்டங்களை வழங்கியது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் என தெரிவித்தார். எதிர்கட்சி

திமுக ஆட்சியில் பாலாறு விவகாரத்தை தீர்க்காதது ஏன்? திமுகவுக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சியில் பாலாறு விவகாரத்தை தீர்க்காதது ஏன்? திமுகவுக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

செவ்வாய், ஜூலை 26,2016, சென்னை : பாலாற்றின் குறுக்கே தடுப்பணை விவகாரத்தில், ஆந்திர அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்றும், ஆனால் மைனாரிட்டி தி.மு.க. அரசோ அக்கறையுடன் செயல்படவில்லை என்றும் சட்டசபையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றம் சாட்டினார். தி.மு.க அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டியிருக்காது என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சட்டசபை நேற்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார்.

நலிந்தோர் உதவித்தொகை வழங்க ரூ.4,200 கோடி ஒதுக்கீடு ; அமைச்சர் உதயகுமார்

நலிந்தோர் உதவித்தொகை வழங்க ரூ.4,200 கோடி ஒதுக்கீடு ; அமைச்சர் உதயகுமார்

செவ்வாய், ஜூலை 26,2016, நலிந்தோர் உதவித்தொகை வழங்க ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்தார். சட்டசபையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் (குளச்சல் தொகுதி) பேசினார். அவர் பேசும்போது, முதியோர் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி பேசினார். அதற்கு அமைச்சர் உதயக்குமார் விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் தொகுதியில் (ஆர்.கே.நகர்) ஒரே நாளில்

நாஞ்சில் சம்பத்தின் தந்தை மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

நாஞ்சில் சம்பத்தின் தந்தை மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கள் , ஜூலை 25,2016, அதிமுக செய்தித் தொடர்புக்கு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் மறைவுக்கு,அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கழக செய்தித் தொடர்புக்கு குழு உறுப்பினர் திரு. நாஞ்சில் சம்பத்தின் தந்தை திரு. பாஸ்கர் பணிக்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், அவரது

மறைந்த நடிகர் “பசி” நாராயணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மறைந்த நடிகர் “பசி” நாராயணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 25,2016, வறுமையில் வாடும் மறைந்த நடிகர் பசி நாராயணனின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த “பசி” நாராயணனின் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து

தமிழகம் முழுவதும் ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 25,2016, சென்னை : அ.தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்க கூட்டம் தமிழகம் முழுவதும் வரும் 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தனி மனிதரும், ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் இந்த பட்ஜெட் குறித்து இணையதளங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.வினருக்கு வேண்டுகோள்

ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆவின் ஊழியர்கள் நன்றி

ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆவின் ஊழியர்கள் நன்றி

ஞாயிறு, ஜூலை 24,2016, ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆவின் ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. பால் உற்பத்தியும் முடங்கியது. பின்னர், முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்று கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு சிறப்பு திட்டங்களால், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீட்கப்பட்டு, படிப்படியாக பால் உற்பத்தி அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் லாபத்தை குவித்தது.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் குடும்பத்தினர் நன்றி

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் குடும்பத்தினர் நன்றி

ஞாயிறு, ஜூலை 24,2016, வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த 3 மீனவர் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தலா 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சருக்கு, மீனவர்களின் குடும்பத்தினர் கண்னீர்மல்க நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலன் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 15-ம் தேதி கடலுக்குள்