திருவள்ளூரில் சேதமடைந்த தரைப்பாலங்களை ஆய்வு செய்து,102 குடிசைவீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

திருவள்ளூரில் சேதமடைந்த தரைப்பாலங்களை ஆய்வு செய்து,102 குடிசைவீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

டிசம்பர் 07,2015, சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாஆணையின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பாலங்களை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின்காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்ததால்தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. அதன்படி, திருவள்ளூர் வட்டம்புதுச்சத்திரத்தில் திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் பாதையில் முழுவதும்சேதமடைந்த தரைப்பாலத்தையும், அரண்வாயல் அருகே திருமழிசைஊத்தூக்கோட்டைசெல்லும் பாதையில் உள்ள சேதமடைந்த தரைப்பாலத்தையும்பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருத்தணி-நாகலாபுரம் சாலையில் என்.என்.கண்டிகை கிராமத்தில்கொசஸ்தலை

பருவமழை நிலவரம்-மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு

பருவமழை நிலவரம்-மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பருவமழை நிலவரம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், கே.ஏ.ஜெயபால், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும்படி முதலமைச்சர்